இனி Aadhaar Cardயில் அனைத்து வேலையும் எளிதாக முடியும் புதிய சேவை அறிமுகம்.

Updated on 15-Feb-2023
HIGHLIGHTS

UIDAI புதிய AI ஆதரவு சாட்போட்டை Aadhaar Mitra அறிமுகப்படுத்தியது,

ஆதார் தொடர்பான ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கப்படும்

Aadhaar Mitra: பயன்படுத்துத்துவது எப்படி தெரிஞ்சிக்கோங்க.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சமீபத்தில் ஒரு புதிய AI ஆதரவு சாட்போட்டை அறிமுகப்படுத்தியது, இது மக்கள் தங்கள் ஆதார் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும். இது ஆதார் மித்ரா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் PVC நிலையை கண்காணிக்க முடியும். புகாரை பதிவு செய்ய முடியும். மேலும் பல விஷயங்களையும் செய்ய முடியும். ஆதார் மித்ரா என்றால் என்ன, அதை எப்படிப் பயன்படுத்தலாம்.

இதற்காக, UIDAI ஒரு ட்வீட் செய்துள்ளது, அதில், "#ResidentFirst #UIDAI இன் புதிய AI/ML அடிப்படையிலான அரட்டை ஆதரவு இப்போது சிறந்த பயனர் அனுபவத்திற்குக் கிடைக்கிறது. இப்போது பொதுமக்கள் தங்கள் #Aadhaar PVC அட்டையின் நிலையைப் பார்க்கலாம், பதிவுசெய்து குறைகளைக் கண்காணிக்கலாம் https://www. /uidai.gov.in/en/ #AadhaarMitra யில் செல்லவும்.

Aadhaar Mitra என்றால் என்ன ?

Aadhaar Mitra, UIDAI யின் புதிய சேட்பாட் ஆகும். இதை நீங்கள் www.uidai.gov.in யில் சென்று அக்சஸ் செய்யலாம். இணையதளத்தில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், ஆதார் தொடர்பான அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் சாட்போட் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதார் மையத்தின் இருப்பிடம், பதிவு செய்தல், புதுப்பித்தல் நிலை, பிவிசி கார்டு ஆர்டர் நிலை, புகார் நிலை, பதிவு மையம் போன்ற பணிகள் இதில் அடங்கும். AI சாட்பாட் தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் கிடைக்கிறது.

Aadhaar Mitra: பயன்படுத்துத்துவது எப்படி ?

  • முதலில் நீங்கள் www.uidai.gov.in யில் செல்ல வேண்டும்.
  • பிறகு ஹோம் பேஜ் பக்கத்தில்  Aadhaar Mitra வின் பாக்ஸ் தெரிந்து விடும் இந்த பட்டன் வாடாது பக்கத்தில் தோன்றும்.
  • இந்த பாக்சில் க்ளிக் செய்த உடனே சேட்பாட் திறந்துவிடும்.
  • பிறகு நீங்கள் உங்களின் கேள்வியை கேக்க Get Started யில் க்ளிக் செய்ய வேண்டும்
  • சர்ச் பாக்சில் உங்கள் கேள்வியைத் டைப் செய்யலாம் மற்றும் பதில் கிடைக்கும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :