UIDAI அதன் Aadhaar பயனர்களுக்கு “ஆதார் லோக் /அனலாக் ” எனப்படும் பயனுள்ள மற்றும் பயனுள்ள அம்சத்தை வழங்குகிறது. உங்கள் ஆதார் எண் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்கான கட்டுப்பாட்டை இது வழங்குகிறது. தனிப்பட்ட டேட்டாக்களின் பாதுகப்பு மற்றும் ப்ரைவசி எப்போதும் அனைத்து பயனர்களுக்கும் முதன்மையான கவலையாகும். குடிமக்கள் தங்கள் ஆதார் நம்பரில் பாதுகாப்பை அதிகரிக்கவும், அதன் மீதான கட்டுப்பாட்டை அவர்களுக்கு வழங்கவும் ஆதார் நம்பரை (UID) லோக் திறக்கும் அம்சத்தை UIDAI வழங்குகிறது.
ஆதார் லோக் /அனலாக் அம்சத்தை இயக்குவது சில செயல்பாடுகளில் குறுக்கிடலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
Aadhaar லாக்/அன்லாக் செய்வதால் என்ன பயன்?
உங்கள் ஆதாரை நீங்கள் லோக் செய்யும்போது, அது உங்கள் ஆதார் நம்பர் (UID) மூலம் அத்ண்டிகேசன் தற்காலிகமாக டிசெபில் செய்கிறது அதாவது உங்கள் அடையாளத்தை சரிபார்க்க யாரும் உங்கள் ஆதார் நம்பரை பயன்படுத்த முடியாது.
அங்கீகார நோக்கங்களுக்காக உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட தற்காலிக 16 டிஜிட் நம்பர் விர்ச்சுவல் ஐடியை (VID) நீங்கள் இன்னும் பயன்படுத்தலாம்.
Aadhaar லாக் எப்படி செய்வது?
முதலில் UIDAI யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்: https://uidai.gov.in/.
“My Aadhaar” செக்சனின் கீழ் “Aadhaar Lock & Unlock” சேவையில் க்ளிக் செய்யவும்.
இதன் பிறகு “UID Lock” தேர்ந்தெடுக்கவும் மற்றும் அதன் பிறகு UID நம்பரில் முழு பெயர் மற்றும் PIN கோடை போடவும்.
இப்பொழுது நீங்கள் SMS மூலம் OTP பெறலாம் அல்லது மீண்டும் mAadhaarஆப் மூலம் ஜெனரேட் செய்யலாம். நேர அடிப்படையிலான OTP (TOTP) தேர்வு செய்யலாம்
உங்களுக்கு கிடைத்த OTP அல்லது TOTP என்டர் செய்து ரெக்வஸ்ட் சப்மிட் செய்யவும்.
வெற்றிகரமான லோக் ஆகிய பிறகு உறுதிப்படுத்தல் மெசேஜை பெறுவீர்கள்
mAadhaar App மூலம் லோக் எப்படி செய்வது?
Google Play Store அல்லது Apple App Store யிலிருந்து mAadhaar ஆப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யலாம்.
உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் OTP ஐப் பயன்படுத்தி உங்கள் mAadhaar ஆப் யில் லோகின் செய்யவும்
இப்பொழுது Services செக்சனில் சென்று மற்றும் “Aadhaar Lock/ Unlock” ஆப்சனை தேர்டுக்கவும்.
“லாக் ஆதார்” என்பதைத் தேர்ந்தெடுத்து, ஸ்க்ரீனில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். வெரிபிகேசனுக்கு பிறகு உங்கள் ஆதார் நம்பர் மற்றும் OTP உள்ளிட வேண்டும்.
ஆதாரை லாக் செய்த பிறகு, அதே முறைகளைப் பயன்படுத்தி மீண்டும் அதைத் திறக்கலாம், ஆனால் இதைச் செய்ய உங்களின் சமீபத்திய VID தேவைப்படும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.