ஆதார் நம்பரை சோசியல் மீடியா வெப்சைட்டில் ஷேர் செய்ய வேண்டாம் UIAD எச்சரிக்கை…
உங்கள் ஆதார் நம்பரிலிருந்து உங்கள் எல்லா தகவலையும் உண்மையிலேயே பெற முடியுமா?
இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இந்த ஆதார் கார்டை வழங்கப்படுகிறது, இந்த ஆதார் கார்ட் அனைத்து பயன்பாட்டுக்கும் தேவை படுகிறது உதாரணமாக அரசு சார்ந்த வேலைக்கு இது மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது, ஆதார் கார்ட் இல்லை என்றால் எந்த வேலையும் நடக்காது என்ற நிலை இப்பொழுது ஏற்பட்டது அப்படி மிகவும் பயன் படும் ஆதார் கார்டில் இருக்கும் தனி நபரின் தகவல்களை திருடபடலம் என டிவிட்டரில் ஒரு சவால் வெளிவந்தது.
.
…இதை தொடர்ந்து உங்கள் தகவலை தெரிந்து கொள்ள வெறும் உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் 12டிஜிட் (digit) நம்பர் இருந்தால் போதும் உங்களின் தகவல் முழு விவரங்களுடன் கண்டுபிடிக்க முடியும் என ஒரு பரபரப்பு நிலவி வருகிறது இதனை அடுத்து பலரும் திடுக்கிட்ட வண்ணம் இருக்கிறதிர்கள் ஆதார் நம்பரை சோசியல் மீடியா வெப்சைட்டில் ஷேர் செய்ய வேண்டாம் UIAD எச்சரிக்கை கொடுத்துள்ளது
இதனை தொடர்ந்து மர்மநபர் ஒருவர் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் அமைப்பின் தலைவர் R.S சர்மாவுக்கு ட்விட்டரில் சவால் ஒன்று பதிவு செய்யப்பட்டது அந்த அந்த மர்ம நபரின் பதிவில் நீங்கள் அமைத்து இருக்கும் இந்த ஆதார் சட்டம் ஒரு தனிப்பட்ட நபரின் தகவலை ஹேக் செய்யமுடியாது என்பதில் நம்பிக்கை இருந்தால் உங்கள் ஆதார் நம்பர் உங்களின் ஆதார் தகவல்களை வெளிப்படையாக தெரிவியுங்கள் என அந்த மர்ம நபர் பதிவிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து ,R S சர்மா தனது ஆதார் நம்பரை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் பிறகு அவர் கூறினார் , "நான் இப்போது உங்களுக்கு சவால் விடுகிறேன். என் ஆதார் நம்பரை வைத்து உங்களால் ஏதாவது தீங்கு ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் செய்து காட்டுங்கள்" என ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.
இந்த வகையில் டிராய் அமைப்பின் தலைவர் சர்மா ட்விட்டரில் தனது ஆதார் நம்பரை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏலியட் ஆல்டென்சர் என்னும் ஹேக்கர் சர்மா குறித்த முழு விவரங்களையும் டுவிட்டரில் பதிவு செய்தார் .
அதாவது, சர்மாவின் மொபைல் நம்பர்,, முகவரி, பிறந்த தேதி, பான் நம்பர் என அவருடைய முழு தகவல்களையும் அந்த நபர் வெளியிட்டார்.இதனை தொடர்ந்து பலரும் ஆச்சர்யம் அடைந்தார்கள்
பிறகு அவர் கூறினார் மேலும் "நான் இதோடு நிறுத்திக்கொள்கிறேன். பொதுவாக சோசியல் மீடியாக்களில் ஆதார் நம்பரை பதிவிடுவது நல்லது அல்ல என்பது உங்களுக்கு தெரியும் என நான் நம்புகிறேன்" என அந்த நபர் கூறினார் .
இந்நிலையில், R.S.ஷர்மா இது பொய்யான தகவல்கள் என தெரிவித்தார். ஹேக்கர்ஸ் அவரது டிமேட் கணக்கின் நம்பர் , அதில் அவரது மூன்று வருட பேமெண்ட் செய்ததற்கான விவரங்களை வெளியிட்டனர். மேலும் SBI டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தியது, ஆதார் கார்டு பயன்படுத்தி ஜூலை 2 ஆர்கானிக் பொருட்களை வாங்கியது குறிப்பிட்ட நிறுவனம் மூலமாக விற்றது என அனைத்து தகவலையும் ஹேக்கர்கள் வெளியிட்டனர்.
இதுமட்டுமல்லாமல், ஒரு படி மேலே போய், ஹேக்கர்ஸ் ட்ராய் சேர்மன் R.S.ஷர்மா-வின் பேங்க் அக்கவுண்டில் பேடிஎம் போன்ற ஆப் கலை பயன்படுத்தி 1 ரூபாய் டெபாசிட் செய்துள்ளனர். இதனால் சர்மா உள்பட அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile