UIDAI மீண்டும் Aadhaar card விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்க்கான கடைசி தேதியை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது
புதிய காலக்கெடு டிசம்பர் 14, 2024 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது,
உங்கள் வீட்டு முகவரி, பெயர் அல்லது பிறந்த தேதி எதுவாக இருந்தாலும், உங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த மாற்றங்களை எளிதாகச் செய்யலாம்.
இலவச Aadhaar அப்டேட் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI மீண்டும் Aadhaar card விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்க்கான கடைசி தேதியை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. புதிய காலக்கெடு டிசம்பர் 14, 2024 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும். உங்கள் வீட்டு முகவரி, பெயர் அல்லது பிறந்த தேதி எதுவாக இருந்தாலும், உங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த மாற்றங்களை எளிதாகச் செய்யலாம்.
UIDAI சார்பில் பயனர்களுக்கு தகவல் அளிக்கும் போது, ’இலவச ஆன்லைன் ஆவணப் பதிவேற்ற வசதியை 14 டிசம்பர் 2024 வரை யுஐடிஏஐ நீட்டித்துள்ளது. இந்தச் சேவையின் பலனைப் பெற, நீங்கள் ‘MyAadhaar போர்ட்டலுக்கு’ செல்ல வேண்டும். மக்கள் தங்கள் ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI வேண்டுகோள் விடுத்துள்ளது, ‘நீங்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க விரும்பினால், நீங்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் இந்த நேரத்தில் உங்கள் மொபைல் நம்பர் ஆதார் நம்பருடன் அப்டேட் செய்ய வேண்டும்.
Aadhaar upate செய்ய என்ன என்ன டாக்யுமென்ட் தேவை
ரேஷன் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
குடியிருப்பு சான்றிதழ்,
பொது அடிப்படை
MNREGA/NREGS வேலை அட்டை
தொழிலாளர் அட்டை
இந்திய பாஸ்போர்ட்பான்/இ-பான் கார்டு
CGHS அட்டை
டிரைவிங் லைசன்ஸ்
டாக்யுமேன்ட்களை எவ்வாறு புதுப்பிப்பது
UIDAI யின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
முதலில் நீங்கள் Update Aadhaar விருப்பத்திற்கு செல்ல வேண்டும்.
இங்கே ஆதார் நம்பர் மற்றும் OTP ஐ உள்ளிட்டு விண்டோ திறக்க வேண்டும்.
டாக்யுமேன்ட்களை அப்டேட் செய்வதற்க்கான விருப்பம் புதிய விண்டோவில் தோன்றும், இங்கே நீங்கள் வெரிபை என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
கீழ்தோன்றும் மெனுவில் அடையாள அட்டையின் ஸ்கேன் மற்றும் முகவரிச் சான்றினைப் பதிவேற்றவும்.
Submit அதில் நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
இறுதியாக உங்கள் கோரிக்கை எண் உருவாக்கப்பட்டு, ஆதார் சில நாட்களில் முழுமையாக புதுப்பிக்கப்படும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.