ஆதார் கார்ட் அப்டேட் செய்வதற்க்கு முன்பை விட அப்பொழுது மிக எளிமையானது. சில மாதங்களுக்கு முன்பு வரை ஆஃப்டேட் செய்வதற்க்கு எந்த தேவையுமில்லை, ஆனால், உங்கள் ஆதார் கார்ட் 10 ஆண்டுகளுக்கு மேல் பழையதாக இருந்தால் அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட அப்டேட் செய்யாமல் இருந்தால், உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்று இப்போது அரசாங்கம் கூறியுள்ளது. ஜூன் 14 வரை ஆதார் அப்டேட் வசதி இலவசம், அதன் பிறகு பணம் செலுத்த வேண்டியிருக்கும். வீட்டிலேயே இலவசமாக உங்கள் ஆதார் அட்டையை எப்படி அப்டேட் செய்யலாம் அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?
ஆதார் அப்டேட் செய்ய உங்களுக்கு முக்கியமாக இரண்டு டாக்யூமென்ட் அவசியமாகும். முதல் அடையாள அட்டை மற்றும் இரண்டாவது முகவரி சான்று. வழக்கமாக, ஆதார் அப்டேட்டுக்கு ஆதார் மையத்தில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் UIDAI இன் படி, இந்த சேவை ஜூன் 14 வரை இலவசம்.