OTT ஆப் சரியாக வேலை செய்யாததால் கஸ்டமர் கேரில் கால் செய்த பாவத்துக்கு 1.5 லட்சம் அபேஸ்
68 வயதான ஒருவர் OTT ((over-the-top services) நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை கஸ்டமர் கேர் நம்பருக்கு கால் செய்தார் ஆனால் சைபர் குற்றவாளிகள் அவரிடம் இருந்த 1.5 லட்சத்தை பறித்துச் சென்றனர். வழக்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தது, OTT ஆப் யில் உள்ள சிக்கல் காரணமாக ஒருவர் அந்த தளத்தின் வாடிக்கையாளர் சேவையை அழைத்தார், ஆனால் உண்மையில் அந்த போன் நம்பர் சைபர் குற்றவாளிகளுக்கு சொந்தமானது. OTT தொடர்பான முதல் மோசடி இதுவல்ல. முன்னதாக OTT கன்டென்ட் விரும்பி பணம் சம்பாதிப்பதாக ஒரு பெண்ணிடம் ரூ.1.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
TOI யின் படி, மேற்கு பெங்களூருவில் உள்ள பசவேஸ்வராநகரில் வசிக்கும் அனிருத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஜனவரி 27 அன்று தன்னிடம் ரூ. 1.5 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார். அனிருத் OTT ஆப்க்கான சப்ஸ்க்ரிப்சனை பெற்றிருந்தார், ஆனால் அவரது டிவி கன்டென்ட் ஸ்ட்ரீமிங் செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டார். இதுபோன்ற சூழ்நிலையில், OTT வாடிக்கையாளர் சேவையில் புகார் செய்ய முடிவு செய்து, இன்டர்நெட்டில் நம்பரை தேடினார். பிறகு அதில் கிடைத்த மொபைல் நம்பரை நோட் செய்து பின் OTT நிறுவனத்திற்கு கான்டேக்ட் செய்ய ஆரம்பித்தார்
ஒரு வெப் பக்கத்த்தில் OTT நிறுவனத்தின் வாடிக்கையாளர் நம்பரை கண்டுபிடித்ததாக அவர் கூறுகிறார். அந்த நம்பரை டயல் செய்த அந்த நபர், சிறிது நேரத்தில் நிறுவன அதிகாரி தன்னை கான்டேக்ட் செய்து கொள்வார் என்று கூறி காலை துண்டித்துவிட்டார், அதன்படி அனிருத்துக்கு வேறு நம்பரில் இருந்து கால் வந்தது. இம்முறையும் காலர் தன்னை OTT நிறுவனத்தின் நிர்வாகி என அறிமுகப்படுத்திக் கொண்டு தனது சப்ச்க்ரிப்சன் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளார். பின்னர், காலர் சிஸ்டமில் பிரச்சனை இருக்கிறது என்று விசாரிப்பது போல் நடந்து கொண்டார், மேலும் பிரச்சனையை தீர்க்க 10 ரூபாய் (ரீசார்ஜ் ஆக) செலுத்த வேண்டும் என்று அனிருத்திடம் கூறினார்
இதையும் படிங்க: Jio வெறும் 599 ரூபாயில் 13 OTT,550+ TV மற்றும் 1000GB டேட்டா மற்றும் பல நன்மை
மோசடி செய்பவர் அனிருத்துக்கு மொபைல் நம்பரை அனுப்பியதாகவும், அந்த நம்பருக்கு டாப்-அப் ரீசார்ஜ் செலுத்த வேண்டும் என்றும் கூறியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் அனிருத்திடம் தனது டிஜிட்டல் பேமெண்ட் ஆப்பை திறந்து, மொபைல் நம்பருக்கு பணத்தை மாற்றும் விருப்பத்தில் மொபைல் நம்பரை உள்ளிடச் சொன்னார். பின்னர் அவர் தனது மொபைல் நம்பரில் முதல் ஐந்து இலக்கு நம்பரை தொகைப் பிரிவில் உள்ளிடவும், குறிப்புப் பிரிவில் தனது பெயரையும் உள்ளிடுமாறு அனிருத்திடம் கூறினார்.
மொபைல் நம்பரில் ஐந்து இலக்கங்களை ஏன் தொகைப் பிரிவில் உள்ளிட வேண்டும் என்று மோசடி செய்பவரிடம் அனிருத் கேட்டபோது, இது தான் டாப்-அப் ரீசார்ஜ் செயல்முறை என்று மோசடி செய்பவர் கூறினார். ஃபோன் நம்பரில் முதல் ஐந்து இலக்கங்களை, அதாவது 97,411 ஐ அனிருத் உள்ளிட்ட பிறகு, அவரது அக்கவுண்டில் இருந்து அதே அளவு பணம் டெபிட் செய்யப்பட்டது.
பணம் எடுக்கப்பட்டதும் அனிருத் பதற்றமடைந்ததாகவும், ஏன் தனது அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டது என்பதை அறிய விரும்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்பவர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாகக் கூறினார் பிறகு அந்த பணம் மீண்டும் அக்கவுண்டுக்கு வந்து விடும் எனக் கூறினார்
இந்த மோசடி இத்துடன் நிற்கவில்லை, இதற்குப் பிறகு, மோசடி செய்பவர் அனிருத்தை கூகுள் பிளேயில் இருந்து ரிமோட் டெஸ்க்டாப் ஆப்பை இன்ஸ்டால் செய்து, அவருடன் பேசிக் கொண்டிருந்த போது, கூடுதலாக ரூ.49,989 திரும்பப் பெற்றார்.
அதன்பிறகு, மோசடி பற்றிய தகவல் கிடைத்ததும், காலை துண்டித்துவிட்டு வங்கியில் புகார் அளித்தார். அவரது பேணக் அக்கவுன்ட் முடக்கப்பட்டுள்ளது, ஆனால் சுமார் 7 நாட்களுக்குப் பிறகு புகார் அளிக்கப்பட்டதால், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது இப்போது கடினமாக உள்ளது என்று போலீசார் கூறுகின்றனர். இருப்பினும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile