ஏர்டெல் நிறுவனத்தின் டிவி ஆப் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அப்டேட் செய்யப்பட்டு நேரலை தொலைகாட்சி, வட்டாரம் மற்றும் சர்வதேச தகவல்களை பார்க்கும் வழி செய்யும் அப்டேட்-ஐ வெளியிட்டது.
இத்துடன் ஜூன் 2018 வரை ஏர்டெல் டிவி ஆப் இலவச சந்தா முறையில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஏர்டெல் டிவி செயலியை இதுவரை சுமார் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து இருப்பதாக அறிவித்துள்ளது.
ஆகஸ்டு 2017-இல் ஒரு கோடி வாடிக்கைாயளர்களை கடந்த ஏர்டெல் டிவி செயலியை வெறும் ஒன்பது மாதங்களில் மட்டும் சுமார் நான்கு கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். அந்த வகையில் புதிய மைல்கல் சாதனையை கொண்டாடும் வகையில், ஏர்டெல் டிவி செயலிக்கான இலவச சந்தாவை டிசம்பர் 30, 2018 வரை நீட்டிப்பதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஜனவரி முதல் மே 2018 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஒடிடி செயலிகளில் ஏர்டெல் டிவி செயலியும் ஒன்று என ஆப் ஆன்னி வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் டிவி ஆப் தற்சமயம் 375-க்கும் அதிகமான நேரலை தொலைகாட்சி சேனல்களையும், 10,000-க்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் பிரபல நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
ஏர்டெல் டிவி செயலி சார்பில் இரோஸ் நௌ, சோனிலிவ், ஹாட்ஸ்டார், அமேசான் மற்றும் பல்வேறு இதர நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு தரவுகளை வழங்குகிறது. இதேபோன்று மேலும் பல்வேறு நிறுவனங்களுடன் ஏர்டெல் ஒப்பந்தமிட இருப்பதாக கூறப்படுகிறது.