அசத்தலான லுக் உடன் Hyundai Verna 2023 டீசர் வெளியீடு, வெறும் 25 ஆயிரம் கொடுத்து புக்கிங் செய்யலாம்.

அசத்தலான லுக் உடன் Hyundai Verna 2023 டீசர் வெளியீடு, வெறும் 25 ஆயிரம் கொடுத்து புக்கிங் செய்யலாம்.
HIGHLIGHTS

புகழ்பெற்ற கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் சமீபத்தில் புதிய ஹூண்டாய் வெர்னா 2023 இன் டீசரை வெளியிட்டது.

நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் புதிய வெர்னாவின் ஒரு காட்சி தெரியும்

ஹூண்டாய் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட செடான் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது

புகழ்பெற்ற கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் சமீபத்தில் புதிய ஹூண்டாய் வெர்னா 2023 இன் டீசரை வெளியிட்டது. நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் புதிய வெர்னாவின் ஒரு காட்சி தெரியும். ஹூண்டாய் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட செடான் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது என்பது டீசரில் இருந்து தெளிவாகிறது. நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் Hyundai புக்கிங் ஆரம்பித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த முறை இந்த செடான் பெட்ரோலில் மட்டுமே வரப் போகிறது, ஏனெனில் பெட்ரோல் பதிப்பு மட்டுமே அதிகாரப்பூர்வ தளத்தில் முன் பதிவு செய்ய கிடைக்கிறது. ஹூண்டாய் வெர்னா 2023 பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

Hyundai Verna 2023 புக்கிங்.

புதிய Hyundai Verna 2023 புக்கிங் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் இரண்டிலும் ஆரம்பித்துள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று அல்லது அருகிலுள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்பைப் பார்வையிடுவதன் மூலம் இந்த செடானை வெறும் 25,000 ரூபாய்க்கு முன்பதிவு செய்யலாம். விலையைப் பற்றி பேசுகையில், புதிய ஹூண்டாய் வெர்னாவின் மதிப்பிடப்பட்ட எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.64 லட்சமாக இருக்கலாம்.

Hyundai Verna 2023 யின் இன்ஜின் பவர்.

புதிய ஹூண்டாய் வெர்னாவில் புதிய மற்றும் ஸ்போர்ட்டியான 1.5 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும். டிரான்ஸ்மிஷன் பற்றி பேசுகையில், இந்த எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் (6MT) மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (7DCT) விருப்பத்தில் வரும். இது 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (6MT) மற்றும் இன்டெலிஜென்ட் வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (IVT) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட 1.5L MPi பெட்ரோல் எஞ்சினிலும் கிடைக்கும்.

புதிய Hyundai Verna சிறந்த பார்போமான்ஸுடன் வாடிக்கையாளர் அசத்தலான டிரைவிங் பார்போமான்ஸ் வழங்கும்.புதிய செடான் 4 டிரிம் விருப்பங்களில் கிடைக்கும். மேம்பட்ட பாதுகாப்பு, அம்சங்கள் மற்றும் வசதியை வழங்கும் வகையில் இந்த செடானை நிறுவனம் வடிவமைத்துள்ளது. உட்புறங்களைப் பற்றி பேசுகையில், ஊடக அறிக்கைகளின்படி, 2023 ஹூண்டாய் வெர்னா ஏராளமான அம்சங்களைக் கொண்ட விசாலமான கேபினைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. உட்புற அம்சங்களில் USB சார்ஜர், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, மல்டி ஃபங்க்ஸ்னல் ஸ்டீயரிங் வீல் மற்றும் ரியர் ஏசி வென்ட்கள் ஆகியவை அடங்கும். சமீபத்திய இணைப்பு விருப்பங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும் புதிய வெர்னாவில் இரட்டை திரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைக் காணலாம். இது தவிர, புதிய வெர்னா மேம்பட்ட டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம் (ADAS) மற்றும் பாதுகாப்பிற்காக பல ஏர்பேக்குகளைப் பெற வாய்ப்புள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo