2023 BMW X7 SUV இந்தியாவில் 381 bhp, இதன் விலையை அறிந்து கொள்ளுங்கள்

Updated on 18-Jan-2023
HIGHLIGHTS

2023 BMW X7 இந்தியாவிற்கு வந்துவிட்டது, இப்போது நாட்டில் விற்பனைக்கு கிடைக்கும் சமீபத்திய சொகுசு SUV ஆகும்

ஜெர்மன் கார் தயாரிப்பாளரின் முதன்மையான SUV இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது

பெட்ரோல் மூலம் இயங்கும் X7 xDrive40i M Sport மற்றும் டீசல் மூலம் இயங்கும் xDrive40d M Sport ஆகியவை அடங்கும்.

2023 BMW X7 இந்தியாவிற்கு வந்துவிட்டது, இப்போது நாட்டில் விற்பனைக்கு கிடைக்கும் சமீபத்திய சொகுசு SUV ஆகும். ஜெர்மன் கார் தயாரிப்பாளரின் முதன்மையான SUV இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது, இதில் பெட்ரோல் மூலம் இயங்கும் X7 xDrive40i M Sport மற்றும் டீசல் மூலம் இயங்கும் xDrive40d M Sport ஆகியவை அடங்கும். புதிய பேஸ்லிப்ட் சில முக்கிய மாற்றங்களுடன் வருகிறது. பிளாக்ஷிப் SUV யின் சமீபத்திய தலைமுறையானது புதிய iDrive OS 8 உடன் முழுமையாக டிசைன் செய்யப்பட்ட வெளிப்புறங்கள் மற்றும் உட்புறங்களைப் பெறுகிறது. 

2023 BMW X7 SUVயின் பெட்ரோல் xDrive40i M ஸ்போர்ட் வேரியண்ட் ரூ.1.22 கோடியில் தொடங்குகிறது, அதே சமயம் xDrive40d M Sport டீசல் வெரியண்ட் ரூ.1.24 கோடியில் தொடங்குகிறது. 2023 X7 ஆனது சென்னையில் உள்ள BMW ஆலையில் உள்நாட்டில் உருவாக்கப்படும். 

டிசைன் பற்றி பேசுகையில், X7 இன் வெளிப்புறம் ஒரு பெரிய சிறுநீரக கிரில் மற்றும் பிளவுபட்ட LED ஹெட்லேம்ப் யூனிட் ஆகியவற்றைப் பெறுகிறது, இது முந்தைய வெர்சனிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. பம்பரின் அடிப்பகுதியில் ஒரு புதிய சென்ட்ரல் ஏர் இன்டேக் இணைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில், புதிய 3D டெயில் லேம்ப்ஸ்கள் உள்ளே கிராபிக்ஸ் இணைக்கப்பட்டுள்ளன. இந்த டெயில் லேம்ப்ஸ்களின் நடுவில் இணைக்கும் குரோம் அலங்காரம் இணைக்கப்பட்டுள்ளது.

உள்ளே, 2023 X7 இன் இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் இன்போடெயின்மென்ட்டிற்காக BMW இன் காவேர்ட் கிளாஸ் டிஸ்பிளே பெறுகிறது. இம்முறை கம்பெனி புதிய மாடலின் டேஷ்போர்டில் 14 கலர் விருப்பங்களுடன் கூடிய சுற்றுப்புற ஒளி பட்டையை சேர்த்துள்ளது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட காற்று துவாரங்கள் மற்றும் கியர் லீவர் ஆகியவையும் உள்ளன. இருக்கைகளில் மசாஜர்கள், காற்றோட்டம் போன்ற மேம்பட்ட மற்றும் ஆடம்பர அம்சங்கள் உள்ளன. இது 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஒலி அமைப்பையும் பெறுகிறது. கார் 120 லிட்டர் வரை பூட் ஸ்பேஸ் பெறுகிறது. டெயில்கேட் ஒரு பிளவு டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது, இது திறக்க வசதியாக உள்ளது.

2023 BMW X7 xDrive40i M Sport ஆனது 3-லிட்டர் 6-சிலிண்டர் இன்-லைன் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 381 hp மற்றும் 520 Nm உச்ச முறுக்குவிசையை உருவாக்குகிறது. மறுபுறம், xDrive40d M Sport ஆனது BMW இன் 3-லிட்டர் 6-சிலிண்டர் இன்-லைன் டீசல் எஞ்சினைப் பெறுகிறது, இது 340 hp மற்றும் 700 Nm உச்ச முறுக்குவிசையை உருவாக்கும் திறன் கொண்டது. இரண்டு என்ஜின்களும் சிறந்த செயல்திறனுக்காக 48V மைல்ட்-ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு இன்ஜின்களும் BMW இன் ட்வின்-டர்போ தொழில்நுட்பம் மற்றும் 4 டிரைவிங் மோடுகளுடன் 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் டிரான்ஸ்மிஷனைப் பெறுகின்றன.

Connect On :