பைக் பிரியர்களுக்கு பஜாஜின் Pulsar NS160, NS200 இரு பைக்குகள் அறிமுகம் செய்துள்ளது.

Updated on 15-Mar-2023
HIGHLIGHTS

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது NS160 மற்றும் NS200 மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது

புதிய பஜாஜ் பல்சர் NS160 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் என்றும் NS200 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது NS160 மற்றும் NS200 மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய பஜாஜ் பல்சர் NS160 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் என்றும் NS200 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இரு மாடல்களின் முந்தைய விலைகளை விட முறையே ரூ. 10 ஆயிரம், ரூ. 7 ஆயிரம் அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இரு மாற்றங்கள் தவிர இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் பல்சர் NS160 மாடலில் ஆயில் கூல்டு 160.3சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 17.2 ஹெச்பி பவர், 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

2012 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட NS200 மாடல் இதுவரை சிறு அப்டேட்களையே பெற்று வந்தது. இந்த நிலையில், 2023 பஜாஜ் பல்சர் NS160 மற்றும் NS200 மாடல்கள் அதிகளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் அப்சைடு-டவுன் ஃபோர்க்குகளையும், டூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது.

பல்சர் NS200 மாடலில் லிக்விட் கூல்டு 199.5சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.5 ஹெச்பி பவர், 18.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இருவித என்ஜின்கள் தவிர, இரு மாடல்களும் ஒரேமாதிரியாகவே காட்சியளிக்கிறது. NS200 மாடலில் சற்றே அகலமான டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :