2023 Bajaj Pulsar 220F இந்தியாவில் சத்தமின்றி அறிமுகம்.செய்யப்பட்டுள்ளது.

Updated on 27-Mar-2023
HIGHLIGHTS

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2023 பல்சர் 220F மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது

2023 பஜாஜ் பல்சர் மாடலில் ஒற்றை மாற்றமாக OBD-2 விதிகளுக்கு பொருந்தும் எஞ்சின் உள்ளது.

இந்திய சந்தையில் 2023 பஜாஜ் பல்சர் 220F மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 37 ஆயிரத்து 126, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2023 பல்சர் 220F மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பல்சர் மோட்டார்சைக்கிள் சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முற்றிலும் புதிய மாடல் என்ற போதிலும் இதன் டிசைன் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் மெல்லிய தோற்றம், கூர்மையான சைடு பேனல்கள் உள்ளன.

இத்துடன் க்ளிப் ஆன் ஹேண்டில்பார்கள், ஸ்ப்லிட் சீட்கள், 2 பீஸ் கிராப் ரெயில் உள்ளிட்டவையும் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 பஜாஜ் பல்சர் மாடலில் ஒற்றை மாற்றமாக OBD-2 விதிகளுக்கு பொருந்தும் எஞ்சின் உள்ளது. இது ரியல்-டைம் காற்று மாசு ஏற்படுவதை டிராக் செய்கிறது.

பிரேகிங் ஹார்டுவேரை பொருத்தவரை முன்புறம் ஒற்றை டிஸ்க், பின்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், பல்பு இண்டிகேட்டர்கள் உள்ளன. இதில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அனலாக் டக்கோமீட்டர், டிஜிட்டல் ஸ்கிரீன் இடம்பெற்று இருக்கிறது.

இவைதவிர 220சிசி, சிங்கில் சிலிண்டர் மோட்டார் 20.11 ஹெச்பி பவர், 18.55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 மாடலில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ரியர் ஷாக்குகள் உள்ளன.

விலை தகவல்.

இந்திய சந்தையில் 2023 பஜாஜ் பல்சர் 220F மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 37 ஆயிரத்து 126, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பல்சர் 220F முந்தைய வெர்ஷனை விட ரூ. 3 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :