2023 Bajaj Chetak எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் வரும்.

Updated on 17-Feb-2023
HIGHLIGHTS

பஜாஜ் நிறுவனம் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் இந்திய ஸ்கூட்டர் பிரிவில் ரி-எண்ட்ரி கொடுத்தது

2022 ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் செட்டாக் யூனிட்களை பஜாஜ் விற்பனை செய்தது

இந்திய சந்தையில் ஸ்கூட்டர் வாங்குவோரின் முதல் தேர்வாக பஜாஜ் இருந்து வந்தது. தற்போது ஸ்கூட்டர் பிரிவில் பஜாஜ் நிறுவனம் எந்த மாடலையும் விற்பனை செய்வதில்லை. சமீபத்தில் தான் பஜாஜ் நிறுவனம் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் இந்திய ஸ்கூட்டர் பிரிவில் ரி-எண்ட்ரி கொடுத்தது. 2022 ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் செட்டாக் யூனிட்களை பஜாஜ் விற்பனை செய்தது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 2023 ஆண்டிற்கு புதிய வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் பஜாஜ் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. புதிய ஸ்கூட்டரின் பேட்டரி திறன் எவ்வித மாற்றமும் பெறாது என்றே தெரிகிறது. எனினும், புதிய ஸ்கூட்டர் மென்பொருள், கண்ட்ரோலர் அல்காரிதம்களில் மாற்றங்கள் செய்யப்படலாம்.

புதிய பஜாஜ் செட்டாக் மாடல் 2423 குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது பிரீமியம் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் 50.4 வோல்ட் 57.24 Ah பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் 4.2 கிலோவாட் பீக் பவர் வெளிப்படுத்தும் மோட்டார் வழங்கப்படுகிறது. புதிய செட்டாக் மாடல் முழு சார்ஜ் செய்தால் 108 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிகிறது.

முன்னதாக 2021 டிசம்பர் மாத வாக்கில் வெளியான தகவல்களின் படி பஜாஜ் நிறுவனம் செட்டாக் ஸ்கூட்டரின் திறனை அதிகப்படுத்த இருப்பதாக கூறப்பட்டது. பஜாஜ் செட்டாக் மாடல் அர்பேன் மற்றும் பிரீமியம் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. தற்போதைய தகவல்களில் செட்டாக் பிரீமியம் வேரியண்ட் பற்றிய விவரங்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :