இந்திய PUBG Mobile பிளேயர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, இனி எந்த சிரமும் இருக்காது..!

இந்திய PUBG Mobile பிளேயர்களுக்கு மகிழ்ச்சியான  செய்தி, இனி  எந்த  சிரமும்  இருக்காது..!

குஜராத் அரசாங்கம் பப்ஜி மொபைல் கேம் விளையாட இந்த ஆண்டு துவக்கத்தில் தடை விதித்தது. இந்த கேம் விளையாடுவோர் அதற்கு அடிமையாவதை தடுக்கும் நோக்கில் கேம் விளையாட தடை விதிப்பதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், தடையை மீறி பப்ஜி விளையாடிய பத்து பேர் சமீத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்திய மொபைல் பிளேயர் தரப்பில்  கூறப்பட்டது  என்னவென்றால்  Health Reminder feature அம்சம் வழங்கப்படுகிறது., இந்த அம்சத்தின்  மூலம்  டைம் லிமிட்டடாக  வைக்கப்பட்டுள்ளது., இதில் சில PUBG Mobile  பிளேயரின்  தரப்பில்  எழுப்ப பட்ட  கேள்வியில் 6 மணி நேரத்திற்க்கு  பிறகு கேம் விளையாட முடிவதில்லை என்ற  கூறப்பட்டது. இப்பொழுது Tencent India  இந்த விஷத்தை  உறுதி படுத்தியது  மேலும் இது  "error"இருந்து என்று  கூறியது. மற்றும் இப்பொழுது PUBG Mobile இப்பொழுது எந்த வித சிரமுமின்றி விளையாடலாம் 

இந்நிலையில், கேம் விளையாட விதிக்கப்பட்டிருக்கும் தடையை கருத்தில் கொண்டும் இதேபோன்று மற்ற பகுதிகளில் கேம் விளையாட தடை ஏற்பட கூடாது என்பதால் இந்த கேமினை உருவாக்கியவர்கள் கேமில் சில மாற்றங்களை செய்திருக்கின்றனர். அதன்படி தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடும் போது திரையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும்.

ஹெல்த் ரிமைண்டர் என அழைக்கப்படும் இந்த அம்சம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து பப்ஜி விளையாட முற்படும் போது, கேமினை நிறுத்திவிடும். பின் கேம் சொல்லும் நேரத்தில் மீண்டும் விளையாட முடியும். இது தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடுவோருக்கு இடைவெளி போன்று அமைகிறது. 

பப்ஜி விளையாடுவோரில் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஹெல்த் ரிமைண்டர்களை ஆக்டிவேட் செய்ய கேம் கோருகிறது. இந்த அம்சம் ஆக்டிவேட் ஆனதும், தொடர்ந்து ஆறு மணி நேரங்களுக்கும் அதிகமாக பப்ஜி விளையாடினால் கேம் தானாக நிறுத்தப்பட்டு விடுகிறது. 

சிலருக்கு இந்த இடைவெளி இரண்டு மணி நேரங்களிலும் ஏற்படுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதுவரை இந்த இடைவெளியை கடக்கும் வழிமுறை பற்றி எவ்வித தகவலும் இல்லை. பப்ஜி விளையாடுவோர் மத்தியில் ஹெல்த் ரிமைண்டர் அம்சத்திற்கு கலவையான விமர்சங்கள் எழுந்துள்ளன. 

ஏற்கனவே பப்ஜி கேம் தொடர்பான கருத்துக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்து தடையை விலக்குவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக பப்ஜி உருவாக்கிய டென்சென்ட் மொபைல்ஸ் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் முறையான தீர்வை எட்ட முயற்சி செய்வதாகவும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

சிலர் திடீரென கேம் நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். 18 வயத்துக்கும் அதிகமானவர்களுக்கும் ரிமைண்டர் வருவதாக சிலர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த அம்சம் எதிர்ப்புக்குரல் எழுப்புவோருக்கு சற்று ஆறுதலான விஷயமாகவே இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo