இந்தியாவில் பப்ஜி மொபைல் உள்பட 118 செயலிகளுக்கு செப்டம்பர் மாத வாக்கில் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த என்கோர் கேம்ஸ் நிறுவனம் பப்ஜி மொபைல் கேமிற்கு மாற்றாக பாஜி எனும் கேமை வெளியிடுவதாக அறிவித்து இருந்தது.
பாஜி கேம்பிளே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், வெளியீட்டின் போது இந்த கேமில் பேட்டிள் ராயல் மோட் வழங்கப்படாது என பாஜி இணை நிறுவனர் விஷால் கோண்டல் தெரிவித்து இருந்தார்.
அறிவிக்கப்பட்டது முதல் இந்தியாவில் பாஜி கேம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. இந்நிலையில், பாஜி கேமிற்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோரில் துவங்கி உள்ளது. முன்பதிவு விவரங்களுடன் கேம் கதைக்களம் மற்றும் கேம்பிளே படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.