PUBG மொபைல் கேமிற்கு மாற்றாக உருவாகி வரும் FAU-G கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிமான முன்பதிவுகளை பெற்று அசத்தி இருக்கிறது.
இதுவரை ஃபாஜி கேம் விளையாட பிளே ஸ்டோரில் சுமார் 10.6 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக இந்த கேமை உருவாக்கி வரும் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
கூகுள் பிளே ஸ்டோரில் ஃபாஜி கேமிற்கு முன்பதிவு செய்வோருக்கு, கேம் எப்போது டவுன்லோட் செய்ய கிடைக்கும், கேமின் அளவு, எந்தெந்த சாதனங்களில் விளையாட முடியும் என்ற தகவல்கள் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பப்படுகிறது.
ஃபாஜி கேமினை என் கோர் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் செப்டம்பர் மாத வாக்கில் தடை செய்யப்பட்டது. அதன்பின் ஃபாஜி கேமிற்கான அறிவிப்பு வெளியானது.
ஃபாஜி கேம்பிளே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், வெளியீட்டின் போது இந்த கேமில் பேட்டிள் ராயல் மோட் வழங்கப்படாது என பாஜி இணை நிறுவனர் விஷால் கோண்டல் தெரிவித்து இருந்தார்.