அசத்தலான ட்ரைலர் உடன் FAU G கேம் வெளியிட்டு தேதி அறிமுகம்
FAUG கேம் டிரெயிலர் வெளியாகி இருக்கிறது
FAUG ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ந்தியாவில் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமுக்கு மாற்றாக உருவாகி வருகிறது.
பெங்களூரை சேர்ந்த என்கோர் கேம்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் FAUG கேம் டிரெயிலர் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தியாவில் இந்த கேம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பிளே ஸ்டோரில் இந்த கேம் விவரங்கள் மற்றும் டிரெயிலர் காட்சிகளை பார்க்கும் போது, இது இந்திய எல்லையின் வடக்கு பகுதியில் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பது போன்ற கதையம்சம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இந்த கேம் இந்தியாவில் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமுக்கு மாற்றாக உருவாகி வருகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் பாஜி கேம் டிரெயிலரில் கேம்பிளே காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
மேலும் இது மற்ற கேம்களை போன்று இன்-ஆப் பர்சேஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் கேம் வெளியானதும் அறிவிக்கப்படலாம். இந்த கேமிற்கான முன்பதிவு தற்சமயம் கூகுள் பிளே ஸ்டோரில் நடைபெற்று வருகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile