கூகிள் பிளே ஸ்டோரில் அதிக சுமார் 25 கோடி டவுன்லோடு பெற்ற Call Of Duty.

கூகிள் பிளே ஸ்டோரில் அதிக சுமார் 25 கோடி டவுன்லோடு பெற்ற Call Of Duty.
HIGHLIGHTS

கால் ஆஃப் டியூட்டி கேம் உலகம் முழுக்க சுமார் 25 கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது

இந்த டவுன்லோட்களில் மொபைல் கேமின் அனைத்து வெர்ஷன்கள், ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது

சந்தையில் வெளியான ஒரு வருடத்திற்குள் கால் ஆஃப் டியூட்டி கேம் உலகம் முழுக்க சுமார் 25 கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது. இதனை சென்சார் டவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
உலகிலேயே இந்த இரு நாடுகளில் தான் இந்த கேம் அதிக டவுன்லோட்களை கடந்து இருக்கிறது என சென்சார் டவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த டவுன்லோட்களில் அமெரிக்கா மட்டும் 18 சதவீதம் பங்கு வகிக்கிறது. இதே காலக்கட்டத்தில் பப்ஜி மொபைல் கேமினை சுமார் 23.6 கோடி பேரும், ஃபோர்ட்னைட் கேமினை சுமார் 7.8 கோடி பேரும் டவுன்லோட் செய்துள்ளனர்.

இந்த டவுன்லோட்களில் மொபைல் கேமின் அனைத்து வெர்ஷன்கள், ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கால் ஆஃப் டியூட்டி கேம் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் அதிக பிரபலமாகி உள்ளது.

சென்சார் டவர் விவரங்களின்படி கால் ஆஃப் டியூட்டி கேமில் பயனர்கள் செலவிட்ட தொகை மூலம் இந்த கேம் ரூ. 2470 கோடி வருவாய் ஈட்டியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. டென்சென்ட் நிறுவனம் கால் ஆஃப் டியூட்டி கேமினை கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்தது. அறிமுகமான முதல் இரண்டு மாதங்களில் இதனை சுமார் 17.2 கோடி பேர் டவுன்லோட் செய்திருந்தனர்.

இதிலும் கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் டவுன்லோட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கால் ஆஃப் டியூட்டி கேம் அதிகபட்ச டவுன்லோட்கள் அமெரிக்காவில் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் இதனை அதிகம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo