BGMI 3.5 அப்டேட் கலக்குது இதை iOS மற்றும் Android போனில் எப்படி டவுன்லோட் செய்வது?
நீங்கள் நீண்ட நாட்களாக காத்து கொண்டிருந்த BGMI 3.5 அப்டேட் ஒரு வழியாக வந்துவிட்டது, இந்த டேவலப்பருக்கு பின்னாடி BGMI gameBGMI கேமின் டெவலப்பர், Krafton, இருக்கிறது இது இன்று முதல் Android மற்றும் iPhone பயனர்களுக்கு BGMI 3.5 புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது. மேலும் இதை பற்றிய தகவல் கேம் டெவலப்பர் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பாட்காஸ்டைப் பகிர்ந்துள்ளார் இது BGMI லேட்டஸ்ட் வெர்சன் நவம்பர் 21, 2024 முதல் டவுன்லோட் செய்யக் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த கேமிங்க்காக பலர் நீண்ட நாட்களாக காத்திருந்தார்கள் என்று சொல்லலாம் மேலும் இது BGMI யின் புதிய வெர்சன் ஆகும். மேலும் இதை BGMI 3.5 apk பைலில் இன்ஸ்டால் செய்து மற்றும் இந்த லேட்டஸ்ட் BGMI game வெர்சனை டவுன்லோட் செய்யலாம். இந்த அப்டேட் அதன் இரு ஆண்ட்ரோய்ட் மற்றும் iOS போன்களுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் மிக சுவாரஸ்யமான கேம் அப்க்ரேட் கொண்டு வந்துள்ளது
BGMI 3.5 update: ரிலீஸ் தேதி மற்றும் நேரம்
BGMI யின் புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு காலை 6:30 மணி முதல் காலை 11:30 மணி வரை கிடைக்கும். IOS பிளேயர்கள் காலை 8:30 மணிக்கு இந்திய நேரப்படி கிடைக்க ஆரம்பிக்கும் . புதிய அப்டேட் நாள் முழுவதும் கிடைக்கும் என்பதால், வீரர்கள் தங்களுக்குரிய ஆப் ஸ்டோர்களுக்குச் சென்று அதைச் சரிபார்க்கலாம். இருப்பினும், வெளியீடு படிப்படியாக நடக்கும். நீங்கள் இன்னும் அதைப் பெறவில்லை என்றால், அப்டேட்டை தொடர்ந்து சரிபார்க்கவும்.
BGMI 3.5 Update புதிய அப்டேட் என்றால் என்ன ?
புதிய BGMI அப்டேட் விளையாட்டில் சில மாற்றங்களையும் மேம்பாடுகளையும் கொண்டுவருகிறது. இது Icemire Frontier Mode, Animal Vehicles, Dragon Battle, Frostborn, Glacier Village மற்றும் பல போன்ற புதிய அம்சங்களுடன் வருகிறது. இது போர்வீரரின் மையமாகவும் விலங்குகளை அடக்குவதற்கான கிரவுண்ட் இருக்கும் ஒரு ஃப்ரோஸ்டைம் இடம்பெற உள்ளது. அரங்கின் இந்த பகுதி வீரர்களுக்கு சிறந்த கொள்ளை வழங்குகிறது மற்றும் ஐஸ் கிரிஸ்டல் கிரேட்ஸ் உள்ளிட்ட பொருட்களால் நிரப்பப்படுகிறது. நிலத்தடி ரூம் கொண்ட மீன் அரசாங்க கட்டிடத்தையும் நீங்கள் பார்வையிடலாம்.
BGMI 3.5 அப்டேட் புதிய பேட்டல் பாஸைக் கொண்டு வரும், இது வீரர்களுக்கு உற்சாகமான ரிவார்ட்ஸ் மற்றும் பல கேம் ஐடம் வெல்ல அனுமதிக்கிறது. இது தவிர, இந்த கேம் நான்கு வீரர்களை ஏற்றிச் செல்லும் வாகனமான மாமத் (Mammoth) போன்ற விலங்கு வாகனங்களை அறிமுகப்படுத்தும். இது வீரர்கள் ஒரே நேரத்தில் மூன்று பயணிகளை சுட அனுமதிக்கிறது.
கடைசியாக BGMI 3.5 யில் இதில் இரண்டு சீட்டர் சூப்பர் டூத் Tiger உங்களுக்குப் பெற்றுத் தரும். இது சிறந்த நேவிகேசன் சக்திவாய்ந்த ஜம்ப் மற்றும் ஆட்டோ-அட்வான்ஸ் அம்சம் போன்ற திறன்களுடன் வருகிறது.
இதையும் படிங்க:BlueSky என்றால் என்ன இதனால் என்ன பயன், X விட்டு செல்ல காரணம் என்ன?
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile