பிரபலமான போர் மொபைல் விளையாட்டு PUBG இன் இந்திய அவதாரமான PUBG Mobile India க்காக காத்திருக்கும் மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி உள்ளது.மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology) PUBG மொபைல் இந்தியாவை இந்தியாவில் தொடங்க அனுமதிக்கவில்லை. உண்மையில், பப் விளையாட்டை வெளியிடும் நிறுவனம் இந்த விளையாட்டின் இந்திய பதிப்பை அறிமுகப்படுத்த நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது, ஆனால் அமைச்சின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை.
இந்தியாவில் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பப்ஜி கேம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் பப்ஜி மொபைல் கேமிற்கான டீசர் வெளியிடப்பட்டது. எனினும், இந்த கேமின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் இந்தியாவில் வெளியாகுமா என நவம்பர் 30ஆம் தேதி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
தற்போது பப்ஜி மொபைல் கேம் மீண்டும் புது அம்சங்களுடன் இந்தியாவில் வெளியிடப்படும் என்று பப்ஜி நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சகம் இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் வெளியிடப்படுவதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. பப்ஜி மொபைல் தாய் நிறுவனம் சீனாவின் டென்சன்ட் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது.