வாழை OTT ரிலீஸில் சிக்கல் தள்ளிப்போனது தேதி எப்போ தெரியுமா?

வாழை OTT ரிலீஸில் சிக்கல் தள்ளிப்போனது தேதி எப்போ தெரியுமா?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை திரைப்படம் ஆகஸ்ட் 23 தியேட்டரில் ரிலீசாகியது இந்த திரைப்படத்திற்க்கு மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பு உள்ளது. இப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் மிக பெரிய ஹிட் படங்களை பரியும் பெருமாள்’ ‘கர்னன் மற்றும் மாமன்னன் போன்ற படத்தை இயக்கியவர் ஆவார் இந்தப் படம் தனது சிறு வயதில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தற்பொழுது இந்த திரைப்படம் OTT ரிலீசாகியது

வாழை OTT ரிலீஸ் தேதி அப்டேட்

வாழை யின் OTT தேதி முன்பு செப்டம்பர் 23 ஆகா இருந்தது அதன் பிறகு மீண்டும் இதன் தேதியை மாற்றப்பட்டு இப்பொழுது அதிகாரபூர்வ தேதி அக்டோபர் 11ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகின்றது என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் Disney +Hostar அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது இது வாழை படத்தினை திரையரங்கில் பார்க்க முடியாமல் போன ரசிகர்களுக்கும் படத்தினை OTT தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்ளது. மேலும் இந்த , தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, பெங்காளி, மராத்தி மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

வாழை படத்தின் கதை மற்றும் வசூல்

வாழை திரைப்படம் இயக்குனர் தனது சிறுவயதில் நடைபெற்ற சம்பவத்தை மையப்படுத்தி இந்த கதையை எடுத்துள்ளார் இதில் ரகுல் மற்றும் பொன்வேல் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் நிகிலா விமல், கலையரசன், ஜே சதீஷ் குமார், திவ்யா துரைசாமி, மற்றும் ஜானகி. ஆகியோர் நடித்துள்ளனர் இதில் பிரபல சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் பாக்ஸ் ஆபிஸில், வாழை வெற்றியடைந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது, ரூ 20 கோடிக்கு அருகில் வசூலித்தது, தயாரிப்பாளர்களை வெற்றி என்று அறிவிக்க தூண்டியது. ‘வாழை’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் திட்டத்தை மாரி செல்வராஜ் படத்தின் வெற்றி சந்திப்பில் தெரிவித்தார். மேலும் இப்படத்திற்கு ரசிகர் மத்தியில் பாராட்டும் பெற்றார்.

மேலும் கதையை பற்றி பேசும்போது மேலும் மாரி செல்வராஜ் பல இடங்களில் பேசுகையில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வேம்பு கதபாத்திரம், எனது சிறு வயதில் வாழைத் தார் சுமக்கும் வேலைக்குச் சென்று விபத்தில் இறந்து போன எனது அக்காவின் கதாபாத்திரம் என குறிப்பிட்டிருந்தார். இது மட்டும் இல்லாமல், எனது வாழ்வின் மிகப்பெரிய கண்ணீர்தான் இந்தப் படம் எனவும் படம் தொடங்குவதற்கு முன்னர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டிருந்தார்.மேலும் இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது இப்படத்தை தியேட்டர் சென்று பார்க்க முடியாதவர் ஆக்டொபர் 11 அன்று டிஸ்னி +ஹோடஸ்ட்டரில் பார்க்கலாம்

இதையும் படிங்க:This Week OTT: இந்த வார லிஸ்ட்டில் இருக்கும் சூப்பர் திரைப்படங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo