OTT Movie: குழந்தைகளுக்கான டாப் 5 அனிமேஷன் மூவீ

OTT Movie: குழந்தைகளுக்கான டாப் 5 அனிமேஷன் மூவீ
HIGHLIGHTS

வார வார OTT தத்தில் புதிய புதிய படங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது

இந்த படங்களை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் பார்க்கலாம்

குழந்தைகளை கவரும் வகையில் பல அசத்தலான அனிமேஷன் திரைப்படங்களை பார்க்கலாம்.

வார வார OTT தத்தில் புதிய புதிய படங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது, ஆனால் அவற்றில் குழந்தைகள் பார்க்க கூடிய மற்றும் அவர்கள் மனதை கவரும் வகையில் திரைப்படங்கள் அமைந்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்க்கிறோம் அந்த வகையில் உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக கொண்டு வந்துள்ளோம் மேலும் இந்த படங்களை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் பார்க்கலாம் இதன் மூலம் அவர்களை குழந்தை பருவத்திற்கு கொண்டு செல்லும் இந்த லிச்ச்டில் குழந்தைகளை கவரும் வகையில் பல அசத்தலான அனிமேஷன் திரைப்படங்களை பார்க்கலாம்.

தி பாஸ் பேபி: (The Boss Baby)

2017ஆம் ஆண்டு வெளியான தி பாஸ் பேபி (The Boss Baby)படம் முழுக்க முழுக்க குழந்தையின் பாசப்போராட்டத்தை மையப்படுத்தி நகைச்சுவை உணர்வோடு எடுக்கப்பட்ட அட்டகாசமான அனிமேசன் படம் ஆகும். தி பாஸ் பேபி என்ற பெயரில் வெளியான நாவலை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. டாம் மெக்ரத் இந்த படத்தினை இயக்கியுள்ளார். அப்பா, அம்மா, மகன் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டில் எங்கிருந்தோ வரும் குழந்தை அவர்களின் பாசத்தை பெறுகையில், 7 வயது சொந்த மகனுக்கு ஏற்படும் ஏக்கத்தையும், கோபத்தையும் நகைச்சுவை நயத்தோடு சொல்லும் இந்த அனிமேஷன் படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தலத்தில் மிஸ் பண்ணாம பாருங்க

லியோ (Leo)

லியோ என்று சொன்னாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது தளபதி திரைப்படமே, ஆனால் நீங்களும் அதே நினைத்திருந்தால் அது தவறு இந்த படம் 2023ஆம் ஆண்டு வெளியான லியோ (LEO)படம் அனிமேசன் படமாகவும் அதேநேரத்தில் அட்வென்சர் படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மையக் கதாபாத்திரமாக லியோ என்ற பல்லிவகையைச் சார்ந்த ஓணான் உள்ளது. இது குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட அனிமேஷன் படம் ஆகும் படத்தில் மார்டன் பேரண்டிங் குறித்து பல்வேறு காட்சிகள் மூலம் சொல்லப்பட்டு இருப்பதால் குடும்பத்துடனே இந்த படத்தைப் பார்க்கலாம். 70 வயதைக் கடந்த லியோ தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வகுப்பறையிலேயே கழித்து விட்டதால், வெளியுலகைச் சுற்றிப் பார்க்க வருகின்றது. அப்போது நடப்பதை கற்பனையாக படமாக்கியுள்ளனர். படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.

3 மினியன்ஸ் (Minions)

மினியன்ஸ் திரைப்படம் ஒரு சூப்பர் என்டர்டைமென்ட் படம் என்று சொல்லலாம் இது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும் அனிமேஷன் யில் இந்த படம் ஒரு கலக்கு கலக்கியுள்ளது என்று சொல்லலாம், உலகின் பலரின் மனதை கவர்ந்த படம் என்று சொல்லலாம் மேலும் இந்த படம் மூன்று பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது உலகில் மினியன்ஸ் தோன்றிய பின்னர் தன்னை விட பலசாலியை பாஸாக தேர்வு செய்து பணிவுடை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் டைனோசரை முதலில் பாஸாக தேர்வு செய்து, பின்னர் மனிதனை தேர்வு செய்கிறது. அதன் பின்னர் அவர்கள் எதிர்கொள்வதை நகைச்சுவையுடன் சொல்லும் படம் தான் மினியன்ஸ். இந்த படத்தை மிஸ் பண்ணாம நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் பாருங்க.

தீ சி பீஸ்ட்: பேண்டசி

கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான தி சீ பீஸ்ட் படம் முழுக்க முழுக்க ஃபேண்டசி, அட்வென்சர் மற்றும் காமெடி நிறைந்த அனிமேசன் திரைப்படம் ஆகும். கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான தி சீ பீஸ்ட் படம் முழுக்க முழுக்க ஃபேண்டசி, அட்வென்சர் மற்றும் காமெடி நிறைந்த அனிமேசன் திரைப்படம் ஆகும். கடலில் உள்ள ஒரு பெரிய மிருகத்தை வேட்டையாட கப்பலில் செல்கிறான் வேட்டையன், அப்போது அந்த கப்பலில் வேட்டைகாரனுக்கு தெரியாமலேயே பக்கத்துக்கு கிராமத்தில் இருந்து குழந்தை ஒன்று வந்துவிடுகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து கடலில் இருக்கும் அந்த பெரிய மிருகத்தை எப்படி வேட்டையாடுகின்றனர் என்பது தான் கதை.. இந்த படத்தை Netflix யில் பார்க்கலாம்.

5 ஒரியன் அண்ட் டார்க்

பூனை, பூச்சி, நாய் என பார்த்தாலும் பயப்படும் சிறுவன் ஓரியனுக்கு இரவின் உருவமாக இருக்கக்கூடிய டார்க் உதவி செய்கிறது சிறுவன் ஓரியன். முனி படத்தில் வரும் ராகவா லாரன்ஸ் மாதிரி இருட்டைப் பார்த்தாலும் பயம் என்கின்றான். இவனது பயத்தைப் போக்க இரவின் உருவமாக இருக்கக்கூடிய டார்க் உதவி செய்கின்றது. இந்த கதையை காமெடியாவும் அட்வென்சராகவும் இந்த படத்தை இயக்கியிருப்பார் ஷேன் சர்மார்ட்ஸ். படம் நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் உள்ளது.

இதையும் படிங்க: Garudan OTT: நகைச்சுவை நடிகர் சூரி நடிக்கும் கருடன் OTT யில் இன்று மாஸ் காட்டுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo