OTT this week : இந்த வார என்ன என்ன படம் லிஸ்ட்டில் இருக்கிறது பாருங்க

OTT this week : இந்த வார என்ன என்ன படம் லிஸ்ட்டில் இருக்கிறது பாருங்க
HIGHLIGHTS

OTT பிளாட்பார்மில் சமீபத்திய மற்றும் அப்கம்மிங் கன்டென்ட் தேடுகிர்கள் என்றால் வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை!

OTT பிளாட்பார்மில் அப்கம்மிங் மற்றும் லேட்டஸ்ட் திரைப்படங்களை பார்க்கலாம்.

இந்த வாரம் OTT புதிய மற்றும் அப்கம்மிங் லிஸ்ட் பார்க்கலாம்

OTT பிளாட்பார்மில் சமீபத்திய மற்றும் அப்கம்மிங் கன்டென்ட் தேடுகிர்கள் என்றால் வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை! OTT பிளாட்பார்மில் அப்கம்மிங் மற்றும் லேட்டஸ்ட் திரைப்படங்களை உங்களுக்கு பிடித்த் ஸ்ட்ரீமிங் தளத்தில் பார்க்கலாம்.

இந்த வாரம், OTT ப்ளாட்பர்ம்களில் பல்வேறு வகையான கண்டேன்ட்களை வெளியிடப்பட உள்ளன. அப்கம்மிங் படங்கள் பல்வேறு வகையானதிரைப்படங்கள் இருக்கின்றன, க்ரைம் த்ரில்லர்களை ஈடுபடுத்துவது முதல் என்டர்டைமென்ட் நகைச்சுவைகள் வரை பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகின்றன. இந்த வாரம் OTT புதிய மற்றும் அப்கம்மிங் லிஸ்ட் பார்க்கலாம்

கள்வன் (Kalvan)

கள்வன் இந்த திரைப்படம் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகியுள்ளது இப்படம் P.V. ஷங்கர் இயக்கத்தில், வெளியாகியுள்ளது, மேலும் இப்படத்தில் பாரதிராஜா, இவானா, KPY பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். காடுகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில், மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன், அற்புதமான விஷுவல், மயக்கும் இசை மற்றும் நடிகர்களின் பாராட்டத்தக்க நடிப்பு என “கள்வன்” படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்தது. மே 14 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “கள்வன்” படத்தை பார்த்து மகிழலாம். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

தி பாய்ஸ் (The Boys)

தி பாய்ஸ் தமிழ் மொழி காமெடி டிராமா சந்தோஷ் பி ஜெயக்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது மார்ச் 29, 2024 அன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது மற்றும் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் கதைக்களம் ஒரு அதிர்ச்சியூட்டும் மர்மம். அகிரா, கார்த்தி, பேபி, ஜேம்ஸ் மற்றும் கோலார் ஆகிய ஐந்து நண்பர்களின் வாழ்க்கையை இது பின்தொடர்கிறது பாய்ஸ் மே 14, 2024 அன்று OTT இல் வெளியிடப்பட்டது, தற்போது ஆஹா பிளாட்ஃபார்மில் பிரீமியர் செய்யப்படுகிறது.

ஹோட் ஸ்போட் (Hot Spot),

Hot Spot திரைப்படம் மார்ச் 29 தியேட்டரில் ரிலிசாகியது இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் ஆவர் இப்படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கௌரி ஜி கிஷன், அம்மு அபிராமி, ஆதித்ய பாஸ்கர், சுபாஷ் செல்வம், ஜனனி மற்றும் சோபியா பலர் நடித்துள்ளனர் இதனை தொடர்ந்து இப்பொழுது இதன் OTT May 17. அன்று aHa Tamil மற்றும் Prime Videos யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

ரோமியோ (Romeo)

ரோமியோ – இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தில் விஜய் ஆன்டனி, முக்கிய ரோலில் நடித்துள்ளார் காதல் – நகைச்சுவை மற்றும் குடும்ப படமாக அமைந்துள்ள ரோமியோ படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக இப்படத்தின் நாயகன் விஜய் ஆன்டனி எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2024 ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஏப்ரல் 11ல் தமிழ் & தெலுங்கு இருமொழியில் உருவாகி உலகமெங்கும் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் ஆஹா தமிழ் & அமேசான் பிரைம் யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

ஆடுஜீவிதம் (Aadujeevitham)

இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில், வெளிவந்த ஆடுஜீவிதம் திரைப்படத்தில் நடிகர் பிருத்விராஜ் முக்கிய ரோலில் நடித்துள்ளார் த கோட் லைஃப் ஆடுஜீவிதம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது இப்படம் மார்ச் 28ந் தேதி தியேட்டரில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் வெளியானது மே 26 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தின் டிஜிட்டல் உரிமை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளதால், அந்த ஓடிடியில் ஒளிபரப்பாகும். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓடிடி நிறுவனம் இன்னும் வரவில்லை

ஸ்டார் (Star)

ஸ்டார் – இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹங்கர், லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் பலர் நடித்துள்ளனர் இந்த திரைப்படத்தை ஓடிடியை பிரைம் வீடியோ கைப்பற்றியுள்ளதாகவும் படம் ரிலீசாகி நான்கு வாரங்கள் கழித்து அதாவது வரும் ஜூன் மாதம் 14ம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க Star Movie :தியேட்டரில் கலக்கி வரும் கவினின் மாசன படத்தின் OTT அறிவிப்பு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo