Pushpa 2 கலெக்சனில் ரூ,1000கோடி அமோக வசூல, OTT அதிரடி தகவல்
Pushpa 2 வசூல் நாள் 16: அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. புஷ்பா 2 படத்தின் வெற்றியை தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்தியாவிலும் பார்க்கின்றனர். புஷ்பா 2 படம் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.171.1 கோடி வியாபாரம் செய்தது. இந்த படத்தின் ஹிந்தி பதிப்பே முதல் நாளில் 67 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இப்படம் வெளியாகி 16 நாட்கள் கடந்து இன்று 17வது நாளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் மொத்த வசூல் எங்கு சென்றுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்!
Pushpa 2 கலெக்சன்
புஷ்பா 2: தி ரூல் படம் வெளியாகி 16 நாட்கள் கடந்துவிட்டன. இப்படம் 15வது நாளில் இந்திய அளவில் ரூ.990 கோடி வசூலித்துள்ளது. அதாவது இரண்டே வாரங்களில் 1000 கோடியை நெருங்கி விட்டது இந்த படம். தற்போது வெளியாகி மூன்றாவது வாரமும் தொடர்கிறது. இப்படம் 16வது நாளில் நல்ல வசூலை ஈட்டியது. Sacnilk படி , அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் படம் 16 வது நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ 13.75 கோடி சம்பாதித்தது. இதன் மூலம் படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியை தாண்டி ரூ.1004 கோடியை எட்டியுள்ளது.
The PushpaRaj storm rages on! 🔥#Pushpa2TheRule smashes 1500 CRORES GROSS worldwide! 🌟💥
— Right Klick Studio (@RightKlickSTD) December 19, 2024
The HIGHEST GROSSER OF INDIAN CINEMA IN 2024 🔥 #Pushpa2 #WildFirePushpa
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @MythriOfficial @PushpaMovie pic.twitter.com/q6uqVqictI
புஷ்பா 2: தி ரூல் 2021 ஆம் ஆண்டு தெலுங்கு பிளாக்பஸ்டர் புஷ்பா: தி ரைஸின் தொடர்ச்சியாகும். இப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் டிசம்பர் 5 அன்று வெளியிடப்பட்டது. இது 2024 இன் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. புஷ்பா 2 திரைப்படம் அமீர்கானின் தங்கல், பிரபாஸ் பாகுபலி 2 மற்றும் கல்கி 2898 AD, SS ராஜமௌலியின் RRR மற்றும் ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் போன்ற ₹ 1,000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
Read this :- Blockbuster 2024:இந்த ஆண்டு மிக பெரிய அளவில் ப்லோக்பஸ்ட்டர் ஹிட் கொடுத்த தமிழ் சூப்பர் டூப்பர் மூவீ
Pushpa 2 தி ரூல் OTT
புஷ்பா 2: தி ரூல் படம் அதன் OTT வெளியீட்டைப் பெறும் நேரத்தைப் பகிர்ந்துள்ளது. இது இந்த மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. புஷ்பா 2: தி ரூல் படத்தின் OTT வெளியீட்டைச் சுற்றியுள்ள வதந்திகளுக்கு மத்தியில் , படத்தின் குழு இப்போது இந்த விஷயத்தில் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை X (முன்னர் ட்விட்டர்) க்கு எடுத்துக்கொண்டு, Mythri Movie Makers ஒரு புதுப்பிப்பைப் பகிர்ந்துள்ளது, அதாவது படம் ரிலீசாகி 56 நாட்களுக்கு பிறகு OTTக்கு என்று கூறப்பட்டுள்ளது இதோ இங்கே பார்க்கலாம்.
There are rumours floating around about the OTT release of #Pushpa2TheRule
— Mythri Movie Makers (@MythriOfficial) December 20, 2024
Enjoy the Biggest Film #Pushpa2 only on the Big Screens in this Biggest Holiday Season ❤️
It won't be on any OTT before 56 days!
It's #WildFirePushpa only in Theatres Worldwide 🔥
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile