OTT Release:இந்த வார கல கலக்கும் சூப்பர் படங்கள் நண்பருடன் பாப்கான் சாப்பிட்டு கொண்டே பாருங்க

Updated on 13-Sep-2024
HIGHLIGHTS

இந்த வாரம் OTTயில் பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன.

உங்களுக்கு பிடித்த OTT தளங்களில் உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் பார்த்து மகிழலாம்

இந்த வாரம் உங்களுக்கு பிடித்த மூவீ மற்றும் வெப் சீரிஸ் நெட்ப்ளிக்ஸ், zee5, disney+hotstar போன்ற தளத்தில் பார்த்து மகிழலாம்.

இந்த வாரம் OTTயில் பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. அதை உங்களுக்கு பிடித்த OTT தளங்களில் உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் பார்த்து மகிழலாம், மக்கள் தற்பொழுது பயணம் செல்லும்போதோ, அல்லது இருக்கும் இடங்களிலிருந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் OTT யில் திரைப்படம் பார்ப்பதையே அதிகம் விரும்புகிறார்கள் அன் வகையில் இந்த வாரம் உங்களுக்கு பிடித்த மூவீ மற்றும் வெப் சீரிஸ் நெட்ப்ளிக்ஸ், zee5, disney+hotstar போன்ற தளத்தில் பார்த்து மகிழலாம். சரி இந்த வாரம் என்ன படங்கள் லிஸ்டில் இருக்கிறது என்று பாப்போம் வாங்க

ரகு தாத்தா (Raghu Thatha)

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரகு தாத்தா. இந்த படம் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி Zee5 தளத்தில் வெளியாகும் என அந்த OTT தளம் அறிவித்தன ரகுதாத்தா’வின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது. புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், திறமை மிகு இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த குடும்ப என்டர்டைன்மென்ட் திரைப்படம் ஆகும்.

வெளியீட்டு தேதி: செப்டம்பர் 13
வகை: , குடும்ப நாடகம்
எங்கு பார்க்க வேண்டும்: ZEE5

கோலிசோடா ரைசிங் (Golisoda Rising)

விஜய் மில்டன் இயக்கியுள்ள “கோலிசோடா ரைசிங் (Goli soda rising)” வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்த வெப் சீரிஸ் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த வெப் சீரிஸில் கோலி சோடா திரைப்படத்தில் நடித்த பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் . இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்களோடு விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, அம்மு அபிராமி போன்றோர் ஏற்கனவே பழக்கப்பட்ட கேரக்டர்களாக இந்த சீரிஸிலும் நடித்திருக்கிறார்கள் இந்த வெப் சீரிஸ் 7 மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி) டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் செப்டம்பர் 13 வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெளியீட்டு தேதி: செப்டம்பர் 13
படம் : , கோலிசோடா ரைசிங்
எங்கு பார்க்க வேண்டும்: ஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில்

Berlin

இப்படத்தின் (கதை 1990 களில் டெல்லியில் நடப்பது. ஒரு காது கேளாத-ஊமை மனிதர் (இஷ்வாக் சிங்) வெளிநாட்டு உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்டார். வழக்கைத் தீர்க்க சைகை மொழி நிபுணர் புஷ்கின் வர்மா (அபர்சக்தி குரானா) வரவழைக்கப்படுகிறார். விசாரணையில் பல ரகசியங்கள் வெளிவருகின்றன. இந்த படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இது செப்டம்பர் 13 ZEE5 யில் பார்க்கலாம்

வெளியீட்டு தேதி: செப்டம்பர் 13
வகை: திரில்லர், நாடகம்
எங்கு பார்க்க வேண்டும்: ZEE5

Sector 36

2006-ம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட நொய்டா வழக்கு இந்தத் தொடரில் காட்டப்பட்டுள்ளது. பல குழந்தைகள் மற்றும் பெண்களை கடத்தல், கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக இரண்டு ஆண்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளில் ஒருவர் அவர் நரமாமிசத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த அறிக்கை வாபஸ் பெறப்பட்டது. Netflix யில் Sector 36 இதை பார்க்கலாம் மேலும் இதில் விக்ராந்த் மாஸ்ஸி, தீபக் டோப்ரியால், ஆகாஷ் குரானா, தர்ஷன் ஜரிவாலா, பஹருல் இஸ்லாம், இப்ஷிதா சக்ரவர்த்தி சிங், மகாதேவ் சிங் லகாவத், அஜித் சிங், தீபக் ராய் ஆகியோர் நடித்துள்ளனர்

வெளியீட்டு தேதி: செப்டம்பர் 13
வகை: த்ரில்லர், குற்றம்
எங்கு பார்க்க வேண்டும்: நெட்ஃபிளிக்ஸ்

தலவன் (Thalavan )

இயக்குநர் ஜிஸ் ஜாய் இயக்கத்தில் பிஜுமேனன், ஆசிஃப் அலி நடித்துள்ள மலையாள படம் ‘தலவன்’. இந்தப் படத்தில் அனுஸ்ரீ, மியா ஜார்ஜ், திலீஷ் போத்தன், கோட்டயம் நசீர், ஷங்கர் ராமகிருஷ்ணன், ஜோஜி கே ஜான், தினேஷ், அனுரூப், நந்தன் உன்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் செப்டம்பர் 12-ம் தேதி Sony LIV ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது. படத்தை மலையாளம் தவிர, தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மொழிகளில் பார்க்க முடியும்.

வெளியீட்டு தேதி: செப்டம்பர் 12
படம் : , தலவன்
எங்கு பார்க்க வேண்டும்: Sony LIV

Mr. Bachchan

ஹரிஷ் ஷங்கர் நடிப்பில் இந்திப் படமான ரெய்டு படத்தின் தெலுங்கு ரீமேக் படமான Mr பச்சன் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியது இந்த படம் இப்பொழுது ஒரு மாதத்திற்க்கு பிறகு OTT வெளியாகிறது இந்த படத்தில் ஹரிஷ் ஷங்கரின் ரவி தேஜா, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர் அதன் பின்னர் இப்பொழுது செப்டம்பர் 12 ஆம் தேதியான நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டது.

வெளியீட்டு தேதி: செப்டம்பர் 12
படம் : , Mr. Bachchan
எங்கு பார்க்க வேண்டும்:
நெட்ஃபிளிக்ஸில்

Khalbali Records

இது ஒரு இசைத் சீரிஸ் இதில் 30க்கும் மேற்பட்ட இந்திய இசைக்கலைஞர்கள் பங்களித்துள்ளனர். இதில் ரேகா பரத்வாஜ், அமித் திரிவேதி, நீதி மோகன், அனு மாலிக், ஷாஹித் மல்லையா மற்றும் அபிஜீத் சாவந்த் போன்ற பெயர்கள் அடங்கும். நீங்கள் இசைத் சீரிசை அதன் கதையையும் விரும்பினால், நீங்கள் கல்பாலி ரெக்கார்டுகளை ஸ்ட்ரீம் செய்யலாம். இது செப்டம்பர் 12 அன்று ஜியொசெனிமா யில் பார்க்கலாம் மேலும் இதில் ஸ்கந்த சஞ்சீவ் தாக்கூர், ராம் கபூர், சலோனி பத்ரா, சலோனி கண்ணா, குமார் வருண், பிரப் தீப், ஈபிஆர் ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர்

வெளியீட்டு தேதி: செப்டம்பர் 12
வகை: இசை, நாடகம்
எங்கு பார்க்க வேண்டும்: JioCinema

Bench Life

கார்ப்பரேட் வாழ்க்கையில், மக்கள் வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை பராமரிக்க முயற்சி செய்கிறார்கள். SonyLIV இல் பெஞ்ச் லைஃப் என்பது ஐந்து அலுவலக சக ஊழியர்களின் கதையாகும், அதை நீங்கள் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும் இந்த படத்தில் அகன்ஷா சிங், வைபவ் ரெட்டி, ரித்திகா சிங், நயன் சரிகா, தனிகெல்லா பரணி, சரண் பெர்ரி ஆகியோர் நடித்துள்ளனர்

வெளியீட்டு தேதி: செப்டம்பர் 12
வகை: நாடகம்
எங்கே பார்க்க வேண்டும்: SonyLiv

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :