Kalki 2898 AD அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதலில் தெலுங்குப் படம், இந்தி உட்பட பிற மொழிகளில் டப் செய்யப்பட்டது. இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி என்றும், ‘கல்கி’ படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக வசூல் செய்யக்கூடும் என்றும் தெரிகிறது. அட்வான்ஸ் புக்கிங் குறித்து பார்வையாளர்கள் அளப்பரிய ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர், முதல் நாள் வார நாளாக இருந்தாலும், படம் நல்ல ஓப்பனிங்கைப் பெறுவதாகத் தெரிகிறது.
இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க், இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்யும் என மதிப்பிடுகிறது. இந்திய அளவில் இந்தப் படம் முதல் நாளில் 44 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யும் என மாலை 4 மணி வரையிலான அப்டேட் கூறுகிறது. இந்தப் படம் தெலுங்கு திரையரங்குகளில் 83 சதவீதத்துக்கும் மேல் ஆக்யூபன்ஸி பெற்றுள்ளது. வெள்ளி மற்றும் வார இறுதியில் இது கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 3 மணி நேரம் 1 நிமிடம் ஓடும் இந்த படம் உலகம் முழுவதும் 2டி மற்றும் 3டி-களில் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று ஒருநாள் மட்டும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் காட்சிகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த படத்திற்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவிற்கு வெளிநாடுகளிலும் இருந்தது. இதனால் படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் கிட்டத்தட்ட 40 கோடிகளைக் குவித்தது.
Kalki 2898 AD OTT குறித்து ஒரு சில தகவல் வந்துள்ளது , அந்த வகையில் தற்பொழுது அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூபாய் 175 கோடிக்கு வாங்கியுள்ளது, ஆனால் தற்பொழுது OTT வெளியிடு தேதி குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை, இருப்பினும் இந்த திரைப்படம் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் OTT., தளத்தில் வெளியாகும் என கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படம் அமோக வசூலை பெற்றுள்ளது.
படம் மகாபாரதக் கதையை மைய்யப்படுத்தி அதில் சைன்ஸ் ஃபிக்ஸன் கலந்த படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. படம் முழுவதுமே விசுவல் ட்ரீட் தான். படத்தின் நாயகன் யார் என ரசிகர்கள் யோசிக்கும் அளவிற்கு பிரபாஸும் அமிதாப் பச்சனும் மாறி மாறி ஸ்கோர் செய்கின்றனர். இதனை தொடர்ந்து இந்த படத்திற்க்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி மக்கள் மனதில் நீங்க இடம் பிடிக்கும்.
இதையும் படிங்க:ஜியோவை தொடர்ந்து Airtel திட்டத்தின் விலையும் உயர்வு