மூவீ லவ்வருக்காக இன்று மே 31 தேதியான இன்று பல மடங்கு மஜாவாக இருக்க போகிறது ஏன் என்றால் இன்று இந்தியாவில் Cinema Lovers Day கொண்டாடப்படுகிறது, இன்று, இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளும் வெறும் 99 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த முயற்சியை மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (MAI) தொடங்கியுள்ளது. இதில் PVR, INOX, Cinepolis, Mirag மற்றும் Delite போன்ற பல சினிமா ஹால் அடங்கியுள்ளது. இங்கு சினிமா பிரியர்களுக்கு இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் இதில் தங்களுக்கு பிடித்த திரைப்படங்களை குறைந்த விலையில் பார்க்கலாம் இங்கு நீங்கள் New ரீலிஸ், அல்லது பல க்ளாசிக்கல் மூவீ கூட பார்த்து மகிழலாம்.
இன்று இந்தியாவில் Cinema Lovers Day கொண்டாடப்படுகிறது, இன்று, நாடு முழுவதும் சுமார் 4,000 திரைகளில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகள் வெறும் 99 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த முயற்சியை மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தொடங்கியுள்ளது. சமீபத்திய படங்களின் மந்தமான நடிப்பை ஈடுசெய்ய MAI முயற்சிப்பதாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சில தமிழ் போன்ற மொழி திரைப்படங்கள் பெரிய ஸ்க்ரீனில் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும், இன்று சங்கம் நல்ல வருவாயை எதிர்பார்க்கும்.
இருப்பினும் நீங்கள் சினிமா பிரியர்களாக இருந்து நீங்கள் ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்க நினைத்தாள் இங்கு பல மூவீ வரிசையில் இருக்கிறது ஜூன் மாதத்தில் ஷேட்யுள் மற்றும் பல பார்க்கலாம் Friday Movie buffs லிஸ்டில் இங்கு புதிய ரிலிஸ் “Gangs of Godavari,” “Mr and Mrs Mahi,” “Chotta Bheem and the Curse of Damyaan,” மற்றும் “Haikyuu the Dumpster Battle” போன்ற திரைப்படங்களை டிஸ்கவுன்ட் விலையில் பார்க்கலாம்
Multiplex Association of India (MAI) நேஷனல்வைட் க்ரூப் 2002 தொடங்கப்பட்டது இது FICCI லீடிங் சினிமா ஒப்பரேசன் கீழ் இயங்குகிறது, இது சினிமா கண்காட்சித் துறைக்காக வாதிடுகிறது, தொழில் பங்குதாரர்களுடன் இணைந்து சினிமாவின் ப்ரோபைலை உயர்த்தவும் சவால்களை எதிர்கொள்ளவும் உதவுகிறது. 500க்கும் மேற்பட்ட மல்டிபிளெக்ஸ்கள் மற்றும் 2500+ திரைகள் கொண்ட 11 சினிமா சங்கிலிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் MAI இந்தியாவின் மல்டிபிளக்ஸ் துறையில் சுமார் 75% உள்ளடக்கியது.
இதையும் படிங்க:Motorola யின் இந்த போனின் தகவல் கீக்பெஞ்சில் லீக்