இந்தியாவில் Xiaomi Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 ஹெட்போன் அறிமுகம் .

Updated on 12-May-2020
HIGHLIGHTS

எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலில் ப்ளூடூத் 5, டூயல் நாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன

சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எம்ஐ 10 5ஜி மற்றும் எம்ஐ பாக்ஸ் 4கே உள்ளிட்ட சாதனங்களையும் சியோமி அறிமுகம் செய்தது. 
 
சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 விலை ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், மே 12 முதல் மே 17 ஆம் தேதி வரை இந்த இயர்போன் ரூ. 1000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக இது ரூ. 3999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் அதிக வளர்ச்சி பெற்று வரும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் சந்தையில் புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மூலம் களமிறங்கியுள்ளது. புதிய இயர்போன் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.

புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 அமேசான், எம்ஐ வலைதளம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. விலையை பொருத்த வரை புதிய இயர்போன்ஸ் ரியல்மி பட்ஸ் ஏர் மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கிறது. இதுதவிர நாய்ஸ், போட் மற்றும் இதர பிராண்டுகளிடம் போட்டியை எதிர்கொள்கிறது. 

எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலில் ப்ளூடூத் 5, டூயல் நாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலில் 14.2 எம்எம் டைனமிக் டிரைவர் மற்றும் டைட்டானியம் கம்போசிட் டைஃப்கிராம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆடியோ தரம், கால் தரம் மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :