வாட்டர் ரெஸிஸ்டண்ட் வசதியுடன் Xiaomi ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
புதிய சியோமி Mi அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் பிளாக் நிறத்தில் கடைக்கிறது
Xiaomi சியோமி நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சியோமி Mi அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் 5வாட் அவுட்புட், IPX5 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, அழைப்புகளை ஏற்க மற்றும் நிராகரிக்க ஒற்றை பட்டன் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
விலை மற்றும் விற்பனை:-
புதிய சியோமி Mi அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் பிளாக் நிறத்தில் கடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது Mi அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி Mi அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் அம்சங்கள்
– 5வாட் அவுட்புட்
– சிறப்பான ஆடியோ அனுபவம் வழங்கும் கனடா ஃபைபர் ஃபிலிம்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– ப்ளூடூத் 5
– அழைப்புகளை ஏற்க மற்றும் நிராகரிக்க ஒற்றை பட்டன்
– ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். இயங்குதளங்களுடன் இயங்கும்
– கையளவில் எடுத்து செல்லக்கூடிய வகையில் சிறிய வடிவமைப்பு
– ஆக்ஸ் போர்ட் வசதி
– 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile