JBLC115 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் ரூ. 4999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
JBL பிராண்டின் புதிய சி115 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது
புதிய ஜெபிஎல் சி115 இயர்பட்ஸ் 5.8எம்எம் டிரைவர் மற்றும் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
கால்கள் , வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் மியூசிக் அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
JBL பிராண்டின் புதிய சி115 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் இன்-இயர் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த இயர்போனுடன் மெல்லிய சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய ஜெபிஎல் சி115 இயர்பட்ஸ் 5.8எம்எம் டிரைவர் மற்றும் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் ஆட்டோனோமஸ் கனெக்டிவிட்டி, மோனோ மற்றும் ஸ்டீரியோ மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதனால் அழைப்புகளை மேற்கொள்ளும் போது ஒரு இயர்பட் மட்டும் பயன்படுத்த முடியும்.
கால்கள் , வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் மியூசிக் அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் கூகுள் அசிஸ்டண்ட், அமேசான் அலெக்சா சேவைகளை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கேபிள் வழங்கப்படுகிறது.
இதன் இயர்பட்ஸ் மட்டும் ஆறு மணி நேர பிளேபேக் வழங்குகின்றன. மேலும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் 15 மணி நேரத்திற்கு கூடுதல் பிளேபேக் கிடைக்கிறது. அந்த வகையில் புதிய ஜெபிஎல் சி115 இயர்பட்ஸ் மொத்தம் 21 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.
இந்தியாவில் புதிய ஜெபிஎல் சி115 விலை ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிளாக், மின்ட், ரெட் மற்றும் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile