விங்ஸ் நிறுவனத்தின் புது கேமிங் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்.
விங்ஸ் நிறுவனத்தின் ஃபேண்டம் 850 கேமிங் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது
புதிய ஃபேண்டம் 850 அறிமுகமாகி இருக்கிறது.
இந்த இயர்பட்களில் 13 மில்லிமீட்டர் ஹை-ஃபை டிரைவர்கள், பிரத்யேத கேம் மோட், 40ms அல்ட்ரா-லோ லேடன்சி வழங்கப்பட்டு இருக்கிறது.
விங்ஸ் நிறுவனத்தின் ஃபேண்டம் 850 கேமிங் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக சின்க் ஆப், விங்ஸ் ஃபேண்டம் 800 மற்றும் 760 கேமிங் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய ஃபேண்டம் 850 அறிமுகமாகி இருக்கிறது. இந்த இயர்பட்களில் 13 மில்லிமீட்டர் ஹை-ஃபை டிரைவர்கள், பிரத்யேத கேம் மோட், 40ms அல்ட்ரா-லோ லேடன்சி வழங்கப்பட்டு இருக்கிறது.
இவை கேமிங் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும். இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 10 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது. இத்துடன் புல்லட் சார்ஜ் தொழில்நுட்பம் உள்ளது. இதை கொண்டு 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 நிமிடங்களுக்கான பிளேடைம் பெறலாம். இந்த இயர்பட்ஸ் கேஸ் சேர்க்கும் போது மொத்தத்தில் 50 மணி நேரத்திறான பிளேபேக் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் புதிய விங்ஸ் ஃபேண்டம் 850 கேமிங் இயர்பட்ஸ் விலை அறிமுக சலுகையாக ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிளாக் மற்றும் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை விங்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் நடைபெறுகிறது.
இந்த இயர்பட்ஸ்-இல் ப்ளூடூத் 5.3, ஸ்பீடு சின்க் போன்ற தொழில்நுட்பங்கள் உள்ளன. விங்ஸ் ஃபேண்டம் 850 மாடலில் பிரீமியம் ABS ஷெல் உள்ளது. இத்துடன் IPX5 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இதில் உள்ள குவாட் ENC மைக்ரோபோன்கள் அழைப்புகள் மற்றும் பொழுதுபோக்கிற்கு வெளிப்புறம் சத்தத்தால் இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. இதனுடன் சின்க் ஆப் கொண்டு பல்வேறு EQ மோட்கள், பட்ஸ் லைட்னிங் மோட்களை கஸ்டமைஸ் செய்வது, டச் கண்ட்ரோல்களை மாற்றிக் கொள்வது மற்றும் காணாமல் போகும் பட்களை கண்டறிவது போன்ற வசதிகளை மேற்கொள்ளலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile