விங்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பேண்டம் 210 பெயரில் புது நெக்பேண்ட் இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்போன் டூயல் பேரிங், 50ms லேக்-ஃபிரீ ஆடியோ சின்க், 40 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. முன்னதாக விங்ஸ் நிறுவனம் விங்ஸ் 500 கேமிங் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பேண்டம் 210 மாடலில் உள்ள ப்ளூடூத் 5.3 சிப்செட் அதிவேக டூயல் பேரிங் வசதியை வழங்குகிறது. மேலும் 15 மீட்டர்கள் வரை சீரான கனெக்டிவிட்டியை உறுதிப்படுத்துகிறது. இத்துடன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. விங்ஸ் பேண்டம் 210 மாடலில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய விங்ஸ் பேண்டம் 210 மாடல் எடை குறைந்த பாகங்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் IPX5 கேசிங் கொண்டுள்ளது. மென்மையான சிலிகான் மற்றும் ABS பிளாஸ்டிக் மூலம் விங்ஸ் பேண்டம் 210 இயர்பட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இயர்பட்ஸ்-இன் இரு இயர்பட்களிலும் 13 மில்லிமீட்டர் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. பேண்டம் இயர்போன் மற்றும் நெக்பேண்ட்களில் எல்இடி ஹைலைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
விங்ஸ் பேண்டம் 210 நெக்பேண்ட் கேமிங் இயர்பட்ஸ் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய விங்ஸ் பேண்டம் 210 மாடல் பிளாக் மற்றும் புளூ – கிரே நிறங்களில் கிடைக்கிறது.