விவோ நிறுவனம் புதிய விவோ TWS ஏர் ஏர் இயர்பட்ஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.2, AAC கோடெக், 14.2mm டைனமிக் டிரைவர்கள், 117ms லோ லேடன்சி கேமிங் வசதியை கொண்டிருக்கிறது. இதில் உள்ள டீப்X 2.0 விவோ கோல்டன் இயர் அகௌஸ்டிக்ஸ் லேப்- இல் டியூன் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய விவோ TWS ஏர் இயர்போன் பபுள் வைட் மற்றும் பபுள் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விவோ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
Vivo TWS Air 14.2mm இயக்கியைக் கொண்டுள்ளது. இது தவிர, இது இரட்டை பீம்ஃபார்மிங் மைக்ரோஃபோன் மற்றும் இரண்டு காது குரல் அழைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த இயர்பட்களை Vivo Golden Ears Acoustics Lab தயாரித்துள்ளது. இது டீப்எக்ஸ் 2.0 ஸ்டீரியோ ஒலி விளைவுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது. Vivo TWS Air இல், நீங்கள் மெகா பாஸ், தெளிவான குரல் மற்றும் தெளிவான உயர் பிட்ச் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இணைப்பிற்கு, Vivo TWS ஏர் புளூடூத் 5.2 மற்றும் கூகுள் ஃபாஸ்ட் பேரிங் உள்ளது.
இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 25 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் உள்ள டூயல் மைக்ரோபோன்கள் AI கால் நாய்ஸ் ரிடக்ஷன் அல்காரிதம், L வடிவ ஆண்டி-விண்ட் நாய்ஸ் டக்ட்கள் காற்றின் சத்ததையும் கண்டறிந்து தடுக்கிறது.