டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஹைபாட்ஸ் ஹெச்2 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, 120 எம்எஸ் லோ லேடென்சி மோட், என்விரான்மென்ட்டல்நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம், ஸ்மார்ட் டச் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
– ப்ளூடூத் 5
– டச் கண்ட்ரோல்
– 120 எம்எஸ் லோ-லேடென்சி மோட்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
– 6 மணி நேர பிளேபேக்
– சார்ஜிங் கேசுடன் 24 மணி நேர பேக்கப்
இத்துடன் ஐபிஎக்ஸ்4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்மார்ட் பாப்-அப் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது சமீபத்திய டெக்னோ ஸ்மார்ட்போன்களுடன் இணைந்ததும் பாப்-அப் கனெக்ஸ்ரீன் இன்டர்பேஸ் வழங்குகிறது. புதிய ஹைபாட்ஸ் ஹெச்2 ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேர பிளேபேக், சார்ஜிங் கேசுடன் 24 மணி நேர பேக்கப் வழங்குகிறது.
விலை தகவல்
டெக்னோ ஹைபாட்ஸ் ஹெச்2 பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூலை 27 ஆம் தேதி அமேசான் மற்றும் டெக்னோ ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.