ஸ்வாட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நெக்கான் 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. ஸ்வாட் நெக்கான் 101 மாடலை தொடர்ந்து புதிய 102 நெக்பேண்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் வியரபில்ஸ் பிரிவுக்காக ஸ்வாட் நிறுவனம் கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன் 10mm டிரைவர் கொண்டிருக்கிறது. இது HD ஸ்டீரியோ சவுண்ட், புதுவிதமான பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் 45ms லோ-லேடன்சி கேமிங் மோட் உள்ளது. இது கேமிங் அனுபவத்தை மேம்படுத்திக் கொடுக்கும். டிசைனை பொருத்தவரை புது நெக்பேண்ட் இயர்போன் சிலிகான் மூலம் மிக மென்மையாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய நெக்பேண்ட் இயர்போனை 40 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்போனை 40 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். இதன் பவர் பட்டனை இரண்டு நொடிகள் அழுத்திப்பிடித்தால் கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி சேவையை இயக்கலாம். இதன் இயர்பட்களில் காந்த சக்தி கொண்ட மெட்டல் உள்ளது. இத்துடன் ப்ளூடூத் 5 மற்றும் டூயல் பேரிங் வசதி உள்ளது.
இதன் காரணமாக நீண்ட நேர பயன்பாடுகளின் போதும், இந்த இயர்போன் எவ்வித அசவுகரியத்தையும் ஏற்படுத்தாது. இத்துடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி மற்றும் எர்கோனோமிக் டிசைன் கொண்டிருக்கிறது. இவை அதிக நேரம் பயன்படுத்தும் போதும் சவுகரிய அனுபவத்தை வழங்கும். வலிமையான டிசைன் கொண்டிருப்பதால், உடற்பயிற்சிகளின் போதும் இந்த நெக்பேண்ட் இயர்போன் எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாது.
ஸ்வாட் நெக்கான் 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 899 ஆகும். விற்பனை அமேசான் மற்றும் ஸ்வாட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.