இந்தியாவில் புதிய வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஸ்டஃப்கூல் மாண்டி என அழைக்கப்படும் புதிய ஹெட்போனில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போனினை ஒரே சமயத்தில் இருசாதனங்களுடன் இணைக்க முடியும். நெக்பேன்ட் வடிவமைப்புடன் உருவாகி இருக்கும் ஸ்டஃப்கூல் மாண்டி ஹெட்போனை சுற்றி சிறிய கேபிள்கள் இயர்பட்களுக்கு வழங்கப்படுகிறது.
மைக்ரோபோன் மற்றும் ரிமோட் கொண்டிருப்பதால் ஸ்டஃப்கூல் மாண்டி ஹெட்போனை தொடாமலேயே அழைப்புகளை மேற்கொள்ளவும், இசையை கேட்டு அனுபவிக்கலாம். இத்துடன் இந்த ஹெட்போனில் காந்த வசதி வழங்கப்பட்டிருப்பதால் ஹெட்போனை பயன்படுத்தாத போது இயர்பட்கள் இரண்டும் ஒட்டிக் கொள்ளும்.
இந்தியாவில் ஸ்டஃப்கூல் மாண்டி இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போனின் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வ விற்பனை ஸ்டஃப்கூல் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
ஸ்டஃப்கூல் மாண்டி வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போன்களில் 180 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஹெட்போனினை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 9 மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். ஹெட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் ஆகும்