புதிய ட்ரூ வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ் விலை ரூ. 7,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஹாங் காங்கை சேர்ந்த சவுண்ட் ஒன் நிறுவனம் இந்தியாவில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய சாதனம் சவுண்ட் ஒன் X 6 என அழைக்கப்படுகிறது.
இருப்பினும்,விற்பனையை அதிகரிக்க இது ரூ. 2,750 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக புதிய இயர்பட்ஸ் வாங்குவோருக்கு ரூ. 4,240 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
புதிய இயர்பட்ஸ் சாதனத்தில் வையர்கள் இல்லை. இதனை சக்தியூட்ட 2000 Mah, சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.சவுண்ட் ஒன் எக்ஸ்6 இயர்பட்ஸ் பயனர் காதுகளில் இருந்து எளிதில் கழன்று விழாத வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் மூலம் இயங்குவதால்,
இதில் பில்ட்-இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் பாடல்களை கேட்கும் போதும் அழைப்புகளை ஏற்க முடியும். பெரும்பாலான வயர்லெஸ் இயர்பட்ஸ்களில் பில்ட்-இன் மைக் வசதி வழங்கப்படுவதில்லை. இதனால் பயனர்கள் தங்களது மொபைலை கையில் பிடித்துக் கொண்டே பேச வேண்டும்.
கால்கள் தவிர டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையையும் புதிய இயர்பட்ஸ் கொண்டு பயன்படுத்தலாம். நவீன வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்று சவுண்ட் ஒன் எக்ஸ்6 மாடலும் ஒன்றை ஒன்று தானாக இணைந்து கொள்ளும். சார்ஜிங் கேசில் இருந்து இயர்பட்ஸ்களை எடுத்தவுடனேயே இவை இணைந்து கொள்ளும்.
இயர்பட்ஸ் சாதனத்தில் சார்ஜ் தீர்ந்து போகும் பட்சத்தில் சார்ஜிங் கேஸ் கொண்டு ஐந்து முறை வரை சார்ஜ் செய்து கொள்ளலாம். சார்ஜிங் கேஸ் சாதனத்தை சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும்.சிறப்பம்சங்களை பொருத்தவரை சவுண்ட் ஒன் எக்ஸ்6 மாடல் மூன்று மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.