ஹாங் காங்கை சேர்ந்த சவுண்ட் ஒன் நிறுவனம் இந்தியாவில் புதிய ப்ளூடூத் இயர்போனினை அறிமுகம் செய்தது. புதிய இயர்போன்கள் கழற்றக்கூடிய இயர் பிளக்களும், இரண்டு கேபிள்களுடன் வழங்கப்படுகின்றன. இவற்றை கொண்டு ப்ளூடூத் மற்றும் வையர்டு என இரண்டு மோட்களில் பயன்படுத்த முடியும்.
புதிய இயர்போன்கள் தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் என சவுண்ட் ஒன் தெரிவித்துள்ளது. இயர்போனுடன் வழங்கப்படும் கேஸ் பாக்கெட்களில் வைத்து எங்கும் எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயர்போன்களின் ஒருபுறம் பேட்டரியும் மற்றொரு புறத்தில் கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளன. வையர்டு கேபிள் மோட் கொண்டு பேட்டரி தீர்ந்து போகும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இயர்போன்கள் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கின்றன.
புதிய இயர்போன்களை ப்ளூடூத் மோடில் ஆடியோ அளவினை 60 முதல் 70 சதவிகிதத்தில் பயன்படுத்தும் போது 10 மணி நேர பிளே டைம், முழு அளவு ஆடியோ பயன்படுத்தும் போது 8 மணி நேர பிளே டைம் வழங்குகிறது. இந்த இயர்போன்கள் ப்ளூடுத் 5.0 தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் சவுண்ட் ஒன் டிசி 111 இயர்போன் விலை ரூ. 2,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட காலத்திற்கு அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் இது ரூ. 1,690 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.