சோனி இந்தியாவில் வயர்லெஸ் சப்ஊபர் உடன் சவுண்ட்பார் அறிமுகம்.

சோனி இந்தியாவில்  வயர்லெஸ் சப்ஊபர்  உடன் சவுண்ட்பார் அறிமுகம்.
HIGHLIGHTS

சோனி இந்தியா திங்கள்கிழமை புதிய ஒலிப்பட்டியான HT-S400 ஐ அறிமுகப்படுத்தியது

இந்த சவுண்ட்பார் மாடல் 330W திறன் கொண்டது ஆகும்.

, புதிதாக வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

இசை ஆர்வலர்களை மேம்படுத்தும் நோக்கில், சோனி இந்தியா திங்கள்கிழமை புதிய ஒலிப்பட்டியான HT-S400 ஐ அறிமுகப்படுத்தியது, இது வயர்லெஸ் ஒலிபெருக்கி மற்றும் டால்பி டிஜிட்டல் சினிமாடிக் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

இந்த சவுண்ட்பார் மாடல் 330W திறன் கொண்டது ஆகும். சமீபத்தில் தான் புதிதாக SA-RS5 வயர்லெஸ் ரியர் ஸ்பீக்கர்களை சோனி அறிமுகம் செய்து இருந்தது. இந்த நிலையில், புதிதாக வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

இந்த சவுண்ட்பார் டால்பி டிஜிட்டல் மற்றும் S போர்ஸ் ப்ரோ முன்புற சரவுண்ட் உள்ளிட்டவைகளை சோனி நிறுவனத்தின் டிஜிட்டல் சவுண்ட் பீல்டு பிராசஸிங் தொழில்நுட்பம் மூலம் இணைக்கிறது. இதன் காரணமாக சினிமா தரத்தில் சரவுண்ட் சவுண்ட் அனுபவம் பெற முடியும். இந்த முன்புற ஸ்பீக்கர்கள் X பேலன்ஸ் கொண்டவை ஆகும். இதில் 160 மில்லிமீட்டர் வயர்லெஸ் சப்வூஃபர் உள்ளது.

புதிய HT S400 மாடல் 330W திறன் மற்றும் HDMI-ARC ஒன்-கேபில் கனெக்‌ஷன் கொண்டுள்ளது. சோனி HT S400 சக்திவாய்ந்த வயர்லெஸ் சப்-வூஃபர் ஆகும். இதில் 160 மில்லிமீட்டர் அளவில் பெரிய ஸ்பீக்கர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆழமான, அதிக தரமுள்ள பேஸ் சவுண்ட் மற்றும் டால்பி டிஜிட்டல் உள்ளிட்டவைகளை சப்போர்ட் செய்கிறது. இந்த சவுண்ட்பார் வயர்லெஸ் கனெக்டிவிட்டி, பிரத்யேக வால்யூம் மற்றும் சவுண்ட் பட்டன்கள் அடங்கிய ரிமோட் வழங்கப்பட்டு இருக்கிறது.

சோனி HT S400 வயர்லெஸ் சவுண்ட்பாரில் உள்ள OLED டிஸ்ப்ளே இன்புட் சோர்ஸ், வால்யும் மற்றும் சவுண்ட் ஆப்ஷன் உள்ளிட்டவைகளை காண்பிக்கிறது. இத்துடன் இந்த சவுண்ட்பாரின் பின்புற பேனலில் சோனி சொந்தமாக மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய சோனி HT S400 சவுண்ட்பார் விலை ரூ. 21 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சவுண்ட்பார் விற்பனை சோனி செண்டர் மற்றும் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் மின்சாதன விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo