Sony யின் மூன்று புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்.
சோனி நிறுவனம் மூன்று புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
Sony SRSXB43 SRSXB33 மற்றும் RSXB23 மூன்று மாடல்
சோனி நிறுவனம் மூன்று புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பீக்கர்கள்- எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி43, எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி33 மற்றும் எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி23 என அழைக்கப்படுகின்றன.
மூன்று ஸ்பீக்கர்களிலும் ஐபி67 தர சான்று, எக்ஸ்ட்ரா பாஸ் சவுண்ட் தொழில்நுட்பம், யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, பில்ட் இன் மைக்ரோபோன் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இவற்றில் ஷாக்ப்ரூஃப் பில்டு மற்றும் ஐபி67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பில்ட் இன் மைக் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டு அழைப்புகள் மற்றும் உரையாடல்களை மேற்கொள்ள முடியும்.
சோனியின் மூன்று புதிய ஸ்பீக்கர் மாடல்களிலும் சோனியின் எக்ஸ்-பேலன்ஸ்டு ஸ்பீக்கர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இவை அதிக தரமான ஆடியோவினை மிக துல்லியமாக வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்பீக்கர்கள் பயணங்களின் போது உற்ற துணையாக இருக்கும்.
பார்டி கனெக்ட் அம்சம் கொண்டு 100 ஸ்பீக்கர்களை ஒன்றாக இணைத்து இவற்றை சோனி மியூசிக் சென்ட்டர் ஆப் மூலம் மியூசிக் மற்றும் லைட்னிங் உள்ளிட்டவற்றை மாற்றிமையக்க முடியும். இந்த அம்சம் சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி43 மற்றும் எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி33 என இரு மாடல்களில் வழங்கப்பட்டு உள்ளது.
சோனியின் எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி43, எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி33 மற்றும் எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி23 வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடல்களின் விலை முறையே ரூ. 16990, ரூ. 12990 மற்றும் ரூ. 8990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை ஜூலை 16 ஆம் தேதி சோனி விற்பனை மையங்கள் மற்றும் முன்னி விற்பனையகம் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile