Redmi அதன் புதிய இயர் பட்ஸ் 1800 கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Updated on 26-May-2020
HIGHLIGHTS

புதிய இயர்பட்ஸ் விலை ரூ. 1799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இந்தியாவில் இதன் விற்பனை மே 27 ஆம் தேதி துவங்குகிறது

சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி இயர்பட்ஸ் எஸ் மாடலை அறிமுகம் செய்தது. தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் ரெட்மி இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. 

புதிய இயர்போன்கள் அனைவரின் காதுகளிலும் கச்சிதமாக பொருந்தி கொள்ள ஏதுவாக மொத்தம் மூன்று இயர்டிப்கள் வழங்கப்படுகின்றன.அதில் 7.2 எம்எம் டிரைவர்களை கொண்டிருக்கும் ரெட்மி இயர்பட்ஸ் எஸ் IPX4 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. ஒரு இயர்பட் எடை 4.1 கிராம் ஆகும். இது தற்சமயம் கிடைக்கும் இயர்போன்களில் மிகவும் எடை குறைந்த மாடல் எனலாம்.

புதிய இயர்பட்ஸ் விலை ரூ. 1799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை மே 27 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விற்பனை அமேசான், எம்ஐ ஹோம் ஸ்டோர் மற்றும் எம்ஐ ஸ்டூடியோ விற்பனையகங்களில் நடைபெற இருக்கிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த இயர்போன்கள் நான்கு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் சார்ஜிங் கேஸ் பேட்டரி திறனை சேர்க்கும் போது 12 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, ரியல்டெக் RL8763BFR ப்ளூடூத் சிப் கொண்டு என்விரான்மென்ட்டல் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வழங்குகிறது. 

முன்னதாக இதே இயர்போன் ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ் எனும் பெயரில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 1100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :