ரியல்மி பிரான்டு தனது புதிய U 1 ஸ்மார்ட்போனுடன் அந்நிறுவனத்தின் முதல் இயர்போன்களை அறிமுகம் செய்தது. புதிய இயர்போன் மாடல்களில் 11 mm . ஆடியோ டிரைவர்கள், 160% வரை அதிக பேஸ் வெளிப்பாடு இருக்கும்.
மேக்னெடிக் லாக்கிங் வசதி கொண்ட இந்தியாவின் முதல் வயர்டு இயர்போன் மாடலாக ரியல்மி பட்ஸ் இருக்கிறது. இதன் மூலம் புதிய இயர்போன்களை எளிமையாக பயன்படுத்த முடியும். கெவ்லர் ஃபைபர் கார்டு வழங்கப்பட்டு இருப்பதால் வையரிங் கிழியாமல் இருக்கச் செய்வோதோடு பார்க்கவும், பயன்படுத்தவும் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.
ரியல்மி பட்ஸ் சிறப்பம்சங்கள்:
– 11 எம்.எம். டிரைவர்கள்
– இம்பென்டென்ஸ்: 32Ω
– ஒலி அழுத்த அளவு: 106dB
– ஹார்மோனிக் டிஸ்டார்ஷன்: <1% (1KHz, 1mW)
– ஃபிரீக்வன்சி ரேட்: 20-20,000Hz
– ரேட்டெட் பவர்: 3mW
– இன்-இயர் ஹெட்போன்
– இன்-லைன் ரிமோட்
– 1.25 எம் கேபிள்
– எடை: 13.5 கிராம்
நீண்ட நேரம் பயன்படுத்தினாலும், காதுகளில் வலி ஏற்படாமல் இருக்க ஏதுவாக இயர் டிப்கள் 45 டிகிரி வரை வளைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று பட்டன் கொண்ட இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டுள்ளது
ரியல்மி பட்ஸ் தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி பட்ஸ் விலை ரூ.499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அடுத்த மாதம் முதல் துவங்க இருக்கிறது.