Realme இந்தியாவில் அறிமுகம் செய்தது Buds N1 TWS 40 மணி நேர பேக்கப்

Updated on 09-Sep-2024

Realme Buds N1 திங்களன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன், நிறுவனம் புதிய Realme Narzo 70 Turbo 5G ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகப்படுத்தியது. புதிய ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன்கள் விரைவான சார்ஜ் சப்போர்டுடன் வருகின்றன மற்றும் மொத்த பிளேபேக் நேரத்தை 40 மணிநேரம் வரை வழங்கும் பவர்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவை 12.4 டைனமிக் பாஸ் டிரைவர் மற்றும் டிரிபிள் மைக் சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.

இவை இரட்டை டிவைஸ் கனெக்டிவிட்டி 45ms அல்ட்ரா-லோ லேட்டன்சி மற்றும் 46dB வரையிலான ஹைப்ரிட் இரைச்சல் நொய்ஸ் கேன்சிலேசன் சப்போர்ட் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. Realme Buds N1 ஆனது 360-டிகிரி ஸ்பேஷியல் ஆடியோ எபக்ட் சப்போர்ட் மற்றும் AI-இயங்கும் காலிங் நொய்ஸ் ரிடக்சன் ஆகியவற்றையும் வழங்குகிறது.

Realme Buds N1 இந்திய விலை மற்றும் விற்பனை

இந்தியாவில் Realme Buds N1 விலை ரூ.2,499. இயர்போன்களை சிறப்பு அறிமுக விலையான ரூ.1,999க்கு வாங்கலாம் என்று நிறுவனம் கூறுகிறது. இவை செப்டம்பர் 13 முதல் அமேசான் மற்றும் ரியல்மி இந்தியா வெப்சைட் மூலம் நாட்டில் வாங்குவதற்கு கிடைக்கு இவை எனர்ஜிசைசிங் நிழலில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Realme Buds N1 specifications

Realme Buds N1 ஆனது 12.4mm டைனமிக் பாஸ் டிரைவர்களுடன் வருகிறது மற்றும் டிரிபிள் மைக் சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. அவை ஹைப்ரிட் நொய்ஸ் கேன்சிலேசன் மற்றும் 46dB வரை AI-இயக்கப்படும் காலிங் நொய்ஸ் ரிடக்சன் ஆகியவற்றை சப்போர்ட் செய்கின்றான் இயர்போன்கள் டச் கட்டுப்பாடுகளை சப்போர்ட் செய்கின்றன மேலும் 45ms அல்ட்ரா-லோ லேட்டன்சி மோட் வழங்கும் என்று கூறப்படுகிறது.

Realme’s Buds N1 ஆனது புளூடூத் 5.4 மற்றும் டுயல் டிவைஸ் கனேக்டிவிட்டிகளை சப்போர்ட் செய்கின்றன அவை 360 டிகிரி ஸ்பேஷியல் ஆடியோ எஃபெக்ட் அனுபவத்தை அளிக்கும் பவர் கொண்டவை என்று கூறப்படுகிறது. இயர்போன்கள் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டன்ட் பாதுகாப்பிற்காக IP55 ரேட்டிங் உடன் வருகின்றன.

Realme Buds N1 ஆனது சார்ஜ் கேஸ் மற்றும் சத்தத்தை ரத்து செய்யாமல் 40 மணிநேரம் வரை மொத்த பேட்டரி ஆயுளை வழங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இயர்ஃபோன்கள் ஹைப்ரிட் சத்தம் ரத்துசெய்யும் அம்சத்தை இயக்கியதன் மூலம் 26 மணிநேரம் வரை மொத்த பிளேபேக் நேரத்தை வழங்க முடியும். இது தவிர, 10 நிமிட விரைவு சார்ஜில் ஐந்து மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Realme NARZO 70 Turbo 5G போன் அறிமுகம் இந்த போனின் சுவாரஸ்ய அம்சம் பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :