Ptron நிறுவனம் இந்திய சந்தையில் புதிய "பாஸ்பட்ஸ் Nyx" ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்ட கேஸ் உடன் வழங்கப்படுகிறது. இதுவே இயர்பட்ஸ்-ஐ சார்ஜ் செய்யவும் பயன்படுகிறது. டிசைன் காரணமாக இந்த சார்ஜிங் கேசில் எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்பட்ஸ் சார்ஜிங் அளவை காண்பிக்கிறது.
Ptron பாஸ்பட்ஸ் Nyx மாடல் குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 999 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 1299 ஆகும். விற்பனை அமேசான் மற்றும் பிடிரான் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.
புதிய டூயல் கலர் இயர்பட்ஸ் பயனர் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் 10 மில்லிமீட்டர் சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள் உள்ளன. இவை பேலன்ஸ்டு பேஸ், மிட்ரேன்ஜ் மற்றும் டிரெபில் வழங்குகிறது. இதன் லோ லேடன்சி 50 மில்லிசெகண்ட் ஆகும். இதனால் திரைப்படங்களை பார்க்கும் போது சிறப்பான அனுபவம் கிடைக்கும்.
பிடிரான் பாஸ்பட்ஸ் Nyx ப்ளூடூத் 5.1 மற்றும் டச் இண்டர்ஃபேஸ் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் பேனலில் டச் செய்து அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, வால்யூம் அட்ஜஸ்ட் செய்வது, மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். இந்த இயர்பட்ஸ் மோனோ மற்றும் ஸ்டீரியோ மோட்கள் இடையே சிரமமின்றி மாறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய பாஸ்பட்ஸ் Nyx-ஐ முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 9 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் கூடுதலாக 23 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். இந்த இயர்பட்ஸ்-ஐ ஒரு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். இத்துடன் யுஎஸ்பி டைப் சி கனெக்டர் மற்றும் குயிக் சார்ஜ் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் IPX4 சான்றுடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.