வெறும் ரூ,1 யில் DIZO GoPods D மற்றும் Wireless யில் மிக பெரிய டிஸ்கவுண்ட்.

Updated on 22-Jul-2021
HIGHLIGHTS

டிசோ வயர்லெஸ் நெக்பேண்ட் மற்றும் டிசோ கோபாட்ஸ் டி இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது

இரு இயர்போன்களின் முன்பதிவு ரூ. 1 கட்டணத்தில் நடைபெறுகிறது.

டிசோ நெக்பேண்ட் பிளாக், புளூ, ஆரஞ்சு மற்றும் கிரீன் போன்ற நிறங்களிலும், கோபாட்ஸ் டி இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

ரியல்மியின் டிசோ பிராண்டு இரு இயர்பட்கள் – டிசோ வயர்லெஸ் நெக்பேண்ட் மற்றும் டிசோ கோபாட்ஸ் டி இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. டிசோ வயர்லெஸ் நெக்பேண்ட் விலை ரூ. 1499, டிசோ கோபாட்ஸ் டி ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இரு இயர்போன்களின் முன்பதிவு ரூ. 1 கட்டணத்தில் நடைபெறுகிறது.

டிசோ நெக்பேண்ட் பிளாக், புளூ, ஆரஞ்சு மற்றும் கிரீன் போன்ற நிறங்களிலும், கோபாட்ஸ் டி இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. டிசோ வயர்லெஸ் நெக்பேண்ட் 11.2 எம்எம் பேஸ் பூஸ்ட் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 150 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ப்ளிப்கார்ட் தளத்தில் இரு டிசோ இயர்போன்களின் முன்பதிவும் ஜூலை 21 ஆம் தேதி துவங்கி ஜூலை 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்பதிவில் ரூ. 1 செலுத்தி மீதமுள்ள தொகையை பின்னர் செலுத்தி இயர்போன்களை வாங்கிக் கொள்ளலாம். ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை காரணமாக டிசோ இயர்போன்களுக்கு ரூ. 200 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

DIZO GoPods D Earbuds என்ன சிறப்பு

ஒரு மயக்கும் ரேடியல் உலோக அமைப்புடன், DIZO GOPods D அதன் மேம்பட்ட வேலைப்பாடு செயல்முறையுடன் காதுகளுக்கு அழகைத் தருகிறது. காதுகுழாய்கள் மனித காதுகளின் பணிச்சூழலியல் படி வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொரு காதுகுழாயும் வெறும் 4.1 கிராம் எடையைக் கொண்டிருக்கின்றன, இது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான காதணிகளைக் காட்டிலும் இலகுவாக இருக்கும்.

DIZO GoPods D ஆனது 10 mm பெரிய இயக்கி, மற்றும் பாஸ் பூஸ்ட் + வழிமுறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது DIZO மற்றும் realme இன் ஆடியோ பொறியியல் நிபுணர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :