பிலிப்ஸ் N7808 இயர்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது

பிலிப்ஸ் N7808 இயர்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது
HIGHLIGHTS

டிபி விஷன் நிறுவனம் பிலிப்ஸ் N7808 இயர்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது

புதிய பிலிப்ஸ் N7808 மாடலில் உள்ள சென்சார்கள் பயனர்களின் உறங்கும் விதத்தை டிராக் செய்து பயனர் உறங்கினால், தானாக ஆஃப் ஆகிவிடும் வசதி கொண்டுள்ளது

டிபி விஷன் நிறுவனம் பிலிப்ஸ் N7808 இயர்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிலிப்ஸ் N7808 மாடலில் உள்ள சென்சார்கள் பயனர்களின் உறங்கும் விதத்தை டிராக் செய்து பயனர் உறங்கினால், தானாக ஆஃப் ஆகிவிடும் வசதி கொண்டுள்ளது. இது பிலிப்ஸ் பிராண்டிங்கில் வெளியாகி இருக்கும் முதல் ஸ்லீப் இயர்போன் ஆகும்.

புதிய ஸ்லீப் இயர்போன் டிபி விஷன் மற்றும் ஸ்லீப் ஆய்வாளர் கோகூன் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிலிப்ஸ் N7808 இயர்போனை பயன்படுத்துவோர் அப்படியே உறங்கும் பட்சத்தில் ஆடியோ சத்தம் மெல்ல குறைந்து, தானாக ஆஃப் ஆகி விடும். எனினும், இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படவில்லை. மாறாக இது ஸ்மார்ட் வைட் நாய்ஸ் வெளிப்படுத்துகிறது.

பிலிப்ஸ் N7808 ஸ்லீப் இயர்போன் ஆடியோ அவுட்புட் பயனர் உறங்கியதும் தானாக அட்ஜஸட் ஆகிக் கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. இந்த இயர்போனில் உள்ள மெல்லிய ஹவுசிங் இரவில் எவ்வித இடையூறும் இன்றி சவுகரியமாக அணிந்து கொள்ள உதவுகிறது. இதன் டிசைன் மற்றும் சிறிய ஆர்மேச்சர் டிரைவர்கள் இயர்போனை 6mm அளவில் இருக்க செய்துள்ளது.

இந்த இயர்போன் பயனர்களை தூங்க செய்வதோடு, அவர்கள் உறங்கியதும் தானாக ஆஃப் ஆகும் வசதி கொண்டிருக்கிறது. உறக்கத்தின் போது ஏற்படும் இடையூறுகளுக்கு பதில் சொல்லும் வகையில் புதிய N7808 இயர்போன் அமைந்துள்ளது. இந்த ஹெட்போன்கள் தரமான நாய்ஸ் ஐசோலேஷன் வசதியை வழங்குகிறது. இந்த இயர்போன் ஏற்படுத்தும் வைட் நாய்ஸ் உறக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வெளிப்புற சத்தத்தை குறைக்கச் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo