Philips நிறுவனம் true Wireless இயர்பட்ஸ் மற்றும் ஆடியோ சாதனங்களை இந்தியாவில் அறிமுகம்.

Philips நிறுவனம்  true Wireless இயர்பட்ஸ்  மற்றும்  ஆடியோ  சாதனங்களை  இந்தியாவில்  அறிமுகம்.
HIGHLIGHTS

Philips நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்து உள்ளது

Philips டிஏடி4205பிகே ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ், டிஏஎன்2215பிகே வயர்லெஸ் நெக்பேண்ட், ஹெச்டிஎல்4080 வயர்லெஸ் சவுண்ட்பார் மற்றும் ஹெச்டிஎல்1045 சவுண்ட்பார் உள்ளிட்டவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

பிலிப்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்து உள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் பிரைம் டே சிறப்பு சலுகையின் போது துவங்குகிறது. அமேசானில் பிரைம் டே சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

பிலிப்ஸ் டிஏடி4205பிகே ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ், டிஏஎன்2215பிகே வயர்லெஸ் நெக்பேண்ட், ஹெச்டிஎல்4080 வயர்லெஸ் சவுண்ட்பார் மற்றும் ஹெச்டிஎல்1045 சவுண்ட்பார் உள்ளிட்டவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
 
இதில் டிஏடி4205பிகே ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் மைலர் மெட்டீரியல் டிரைவர்களை கொண்டுள்ளது. இவை அதிக துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இதில் மென்மையான ரப்பரைஸ்டு விங் டிப்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

இவை காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்கின்றன. மேலும் இவை ஐபிஎக்ஸ்5 சான்று மற்றும் 20 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகின்றன. புதிய பிலிப்ஸ் டிஏஎன்2215பிகே வயர்லெஸ் நெக்பேண்ட் ஐபிஎக்ஸ்4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 9 எம்எம் டிரைவர்களை கொண்டுள்ளது. 

இது 11 மணி நேர பேட்டரி பேக் கொண்டது ஆகும். ஹெச்டிஎல்1045 சவுண்ட்பார் மாடலில் ஹெச்டிஎம்ஐ ஏஆர்சி, 4கே ஆடியோ, ப்ளூடூத், ஆப்டிக்கல் ஆடியோ மற்றும் யுஎஸ்பி கொண்டுள்ளது. 

இந்திய சந்தையில் பிலிப்ஸ் டிஏடி4205பிகே விலை ரூ. 6999 என்றும் டிஏஎன்2215பிகே மாடல் விலை ரூ. 3999, ஹெச்டிஎல்4080 சவுண்ட்பார் விலை ரூ. 16990 என்றும் ஹெச்டிஎல்1045 மாடல் விலை ரூ. 9990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo