philips யின் புதிய சவுண்ட்பார் டால்பி அட்மோஸ் வசதியுடன் அறிமுகம்.
பிலிப்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய சவுண்ட்பார், TAB8947 மற்றும் TAB7807 மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய சவுண்ட்பார் சினிமாடிக் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது
பிலிப்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய சவுண்ட்பார், TAB8947 மற்றும் TAB7807 மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சவுண்ட்பார் சினிமாடிக் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள வயர்லெஸ் சப்-வூஃபர் அதிக பேஸ் கொண்டிருக்கிறது. இரு சவுண்ட்பார்களும் வயர்லெஸ் சப்-வூஃபர் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
பிலிப்ஸ் TAB8947 மாடலின் விலை ரூ. 35 ஆயிரத்து 990 என்றும் TAB7807 மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
பிலிப்ஸ் சிறப்பம்சம்.
புதிய பிலிப்ஸ் TAB8947 சவுண்ட்பார் 3.1.2 சேனல்களை கொண்டிருப்பதால் எந்த விதமான அறையிலும் சவுண்ட்-ஐ முழுமையாக அதிக தெளிவாக கொண்டு சேர்க்க முடியும். இது 330 வாட்ஸ் பவர், 360 டிகிரி சரவுண்ட் எஃபெக்ட், டால்பி அட்மோஸ் சப்போர்ட், ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் TAB7807 3.1 சேனல்கள் மற்றும் இரண்டு 8 இன்ச் சக்திவாய்ந்த சப்-வூஃபர்களை கொண்டுள்ளது.
இந்த சவுண்ட்பார் 3D சவுண்ட், 620 வாட்ஸ் பவர் அவுட்புட் மற்றும் ஆறு இண்டகிரேடெட் டிரைவர்களை கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் ஈசிலின்க் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் புதிய சவுண்ட்பார்கள் ஈக்வலைசர் மோட்கள், பேஸ், டிரெபில் மற்றும் வால்யூம் செட்டிங்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile