ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் இயர்பட்ஸ் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
– 13.4 எம்எம் டைனமிக் டிரைவர்கள், டால்மி அட்மோஸ், டிராக் ஆடியோ டியூனர்
– ப்ளூடூத் 5.0
– லோ லேடென்சி ஃபேண்டிக் மோட்
– இயர்பட்ஸ் அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல் வசதி
– ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX4)
– 35 எம்ஏஹெச் பேட்டரி
– 420 எம்ஏஹெச் சார்ஜிங் கேஸ்
– ராப் சார்ஜ்
புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் 13.4 எம்எம் டைனமிக் டிரைவர்கள், பாஸ் பூஸ்ட் மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவை ஒன்பிளஸ் பட்ஸ் இயர்பட்சில் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
ஒன்பிளஸ் பட்ஸ் இயர்பட்சில் மூன்று ஆக்டிவ் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை அழைப்புகளின் போது ஆம்பியன்ட் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வழங்குகிறது. இதில் உள்ள லோ லேடென்சி பேரிங் தொழில்நுட்பம் கொண்டு இயர்பட்ஸ் ஸ்மார்ட்போன்களுடன் மிக எளிதில் இணைந்து கொள்ளும்.
ஒன்பிளஸ் பட்ஸ் வைட், கிரே மற்றும் நார்டு புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் பட்ஸ் இயர்பட்ஸ் அமேசான், ஒன்பிளஸ், ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.