Mivi ஒரே நேரத்தில் இரண்டு புதிய TWS இயர்போன் அறிமுகம்.

Mivi  ஒரே நேரத்தில் இரண்டு புதிய TWS இயர்போன் அறிமுகம்.
HIGHLIGHTS

Mivi இரண்டு புதிய ஆடியோ தயாரிப்புகளான DuoPods M30 இயர்பட்ஸ் மற்றும் காலர் ஃப்ளாஷ் ப்ரோ நெக்பேண்ட் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி அதன் ஆடியோ போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளது

DuoPodகள் 10.5mm இயக்கியுடன் வழங்கப்படுகின்றன

மிவி டுயோபாட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 999 விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

உள்நாட்டு நிறுவனமான Mivi இரண்டு புதிய ஆடியோ தயாரிப்புகளான DuoPods M30 இயர்பட்ஸ் மற்றும் காலர் ஃப்ளாஷ் ப்ரோ நெக்பேண்ட் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி அதன் ஆடியோ போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளது. DuoPodகள் 10.5mm இயக்கியுடன் வழங்கப்படுகின்றன, அதே நேரத்தில் Collar Flash Pro 13mm ஆடியோ இயக்கியைப் பெறுகிறது. இரண்டு ஆடியோ தயாரிப்புகளும் புளூடூத் 5.1 இணைப்பு மற்றும் PNC வொய்ஸ் கேன்ஸிலேசன் ஆதரவைக் கொண்டுள்ளன.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

 மிவி டுயோபாட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 999 விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. மிவி காலர் பிளாஷ் ப்ரோ மாடலும் ரூ. 999 எனும் விலையில் வஇற்பனை செய்யப்பட உள்ளன. இந்த விலை அக்டோபர் 20 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன் பின் இரு இயர்போன்களின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என மாறி விடும். இரு இயர்போன்களும் மிவி அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Mivi சிறப்பம்சங்கள்.

புதிய டுயோபாட்ஸ் மாடலில் உள்ள 10.5 எம்எம் டிரைவர்கள் தரமான சவுண்ட் வழங்குகிறது. இத்துடன் இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 35 எம்ஏஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன. சார்ஜிங் கேசில் 380 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் மைக்ரோ யுஎஸ்பி சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு 42 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

காலர் பிளாஷ் ப்ரோவில் உள்ள 13 எம்எம் டிரைவர் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. நெக்பேண்ட் 250 மணி நேரம் வரை ஆன் செய்யப்பட்டு இருக்கலாம். இதன் இயர்பட்களில் 190 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. காலர் உடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கேபிள் வழங்கப்படுகிறது. காலர் கிளாசிக் ப்ரோ- பிளாக், புளூ, கிரீன், கிரே மற்றும் ரெட் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

இரு இயர்போன்களிலும் ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு 30 மீட்டர்கள் வரை தொலைவில் இருக்கும் சாதனங்களையும் இணைக்கலாம். இத்துடன் PNC நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மிவி டுயோபாட்ஸ் M30 மாடல்- பிளாக், புளூ, பெய்க் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo