Microsoft Surface 2019 நிகழ்வில் இயர்பட்ஸ் வெற்றிகரமாக அறிமுகம்.

Microsoft Surface 2019 நிகழ்வில் இயர்பட்ஸ்  வெற்றிகரமாக அறிமுகம்.

நியூ யார்க் நகரில் நடைபெற்ற Surface 2019 வன்பொருள் நிகழ்வில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சர்ஃபேஸ் லேப்டாப் 3, சர்ஃபேஸ் ப்ரோ 7, சர்ஃபேஸ் ப்ரோ எக்ஸ், சர்ஃபேஸ் நியோ மற்றும் மற்ற சாதனங்களை அறிமுகம் செய்தது. ஏற்கன வெளியான தகவல்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Microsoft Surface இயர்பட்ஸ் விலை 249 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 17,730) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ் சிறப்பம்சங்கள்:

– 25 x 19 எம்.எம்.; எடை: 7.2 கிராம் (ஒரு இயர்பட்)
– 13.6 எம்.எம். டிரைவர்
– 20 –20 kHz ஃபிரீக்வன்சி
– ஒரு இயர்பட்-இல் இரண்டு மைக்ரோபோன்கள்
– டச், டேப், ஸ்வைப், வாய்ஸ் கண்ட்ரோல்
– ஆஃபிஸ் 365 வசதி
– அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கான பேட்டரி
– யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் போர்ட்
– விண்டோஸ் 10, ஆண்ட்ராய்டு 4.4, ஐ.ஒ.எஸ். 9

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ் சாதனத்தில் இன்டியூட்டிவ் டச், வாய்ஸ் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அசைவுகளை கொண்டு இயங்கும் ஜெஸ்ட்யூர் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.அதனை உண்மையாக்கும் வகையில் மைக்ரோசாஃப்ட் தனது சர்ஃபேஸ் இயர்பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo